தமிழ் திரையுலகின் பிரபல கதாநாயகியாக வலம் வரும் நடிகை ஓவியா விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார். முன்னதாக சில மாதங்களுக்கு முன் ஓவியா மற்றும் யோகிபாபு இணைந்து நடிக்கும் கான்ட்ராக்டர் நேசமணி திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது.

இதனிடையே தற்போது கான்ட்ராக்டர் நேசமணி படத்தின் தலைப்பு பூமர் அங்கிள் என மாற்றப்பட்டுள்ளது. இயக்குனர் ஸ்வதீஷ்.M.S. இயக்கத்தில் பக்கா என்டர்டெய்னிங் படமாக தயாராகும் பூமர் அங்கிள் திரைபடத்தை அன்கா மீடியா, ஒலிம்பியா மூவீஸ் மற்றும் ஏ.வி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.

ஓவியா & யோகி பாபு உடன் இணைந்து பூமர் அங்கிள் படத்தில் MS.பாஸ்கர், ரோபோ ஷங்கர், லொள்ளுசபா ஷேசு, KPY பாலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பூமர் அங்கிள் திரைப்படத்திற்கு சுபாஷ் தண்டபாணி ஒளிப்பதிவு செய்ய தர்மா பிரகாஷ் இசையமைக்கிறார்.  

இந்நிலையில் தற்போது பூமர் அங்கிள் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டரில் WONDER WOMAN போன்ற தோற்றத்தில் ஓவியாவும் துப்பாக்கியுடன் யோகி பாபுவும் இருப்பது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. கலக்கலான அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…
 

Feeling elated to reveal the First Look of #BoomarUncle Wishing the entire team for a great success.

Prod @Ankamedia2 starring @iYogiBabu @OviyaaSweetz @karthikthilai @SubashDhandapa2 @IAmAnbu5 @SDharmaprakash@dineshashok_13@swadeshh @EditorElayaraja @johnmediamanagr pic.twitter.com/YaYZAoQlSN

— Oviyaa (@OviyaaSweetz) July 6, 2022