தமிழ் சினிமாவில் பல போராட்டங்களுக்கு பிறகு வெற்றி கண்டவர் நடிகர் அருண் விஜய்.தனது செகண்ட் இன்னிங்ஸில் தொட்டதெல்லாம் வெற்றியாக இவருக்கு அமைந்து வருகிறது. தடம், செக்க சிவந்த வானம், மாஃபியா என ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டி நடித்துள்ளார். மாஃபியா படத்தின் ரிலீஸை தொடர்ந்து அருண்விஜய் சினம்,பாக்ஸர்,அக்னி சிறகுகள்,அருண் விஜய் 31 உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

கொரோனாவுக்கு முன் அறிவழகன் இயக்கத்தில் உருவாகி வந்த அருண் விஜய் 31 படத்தில் விறுவிறுப்பாக நடித்து வந்தார்.கொரோனா பாதிப்பு காரணாமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது. சினம் படத்தை நினைத்தாலே இனிக்கும், ஹரிதாஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய GNR குமரவேலன் இயக்குகிறார். குப்பத்து ராஜா, சிக்ஸர் உள்ளிட்ட படங்களில் நடித்த பாலக் லால்வாணி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். 

இந்த படத்தில் அருண் விஜய் போலீசாக நடித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் நடந்து வந்தன.கொரோனா பாதிப்பு காரணமாக படம் குறித்த வேலைகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.

முன்னணி நடிகர்கள் இந்த காலகட்டத்தில் புது கெட்டப்புக்கு மாறி இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டு ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்து வருகிறார்கள். சமீபத்தில் நடிகர் அருண் விஜய் புது கெட்டப்புக்கு மாறி இருந்தார். ஹாலிவுட் திரைப்படமான வால்வரின் பட ஹீரோ போல இருந்தார். இந்நிலையில் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி பதிவு ஒன்றை செய்துள்ளார் அருண்விஜய். அதில் அப்பா நீங்க தான் என் சூப்பர்ஹீரோ. உங்களை போல் ஒருவர் கிடைக்க நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறோம். லவ் யூ அப்பா என வாழ்த்தி புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார். 

இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விவேக் இயக்கத்தில் பாக்ஸர் படத்தில் நடிக்கவிருக்கிறார் அருண்விஜய். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கிறார். பாக்ஸர் படத்தின் கேரக்டருக்காக மலேசியா மற்றும், வியட்நாமில் சிறப்பு பயிற்சிகளை எடுத்து வந்தார் அருண் விஜய். இமான் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். கடந்த ஆண்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதில் அருண் விஜய்யின் உடலமைப்பு பலரையும் கவர்ந்தது. அருண் விஜய் கைவசம் சினம், அக்னிச் சிறகுகள் போன்ற படங்கள் உள்ளது.