தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் அருண் விஜய் அடுத்தடுத்து அதிரடி ஆக்ஷன் திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. அந்த வகையில் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ஆக்சன் த்ரில்லர் திரைப்படமான பார்டர் திரைப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது. 

முன்னதாக மூடர்கூடம் படத்தின் இயக்குனர் நவீன் இயக்கத்தில் அக்னிச்சிறகுகள், சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஓ மை டாக், மீண்டும் காவல்துறை அதிகாரியாக சீனம் மற்றும் குத்துச்சண்டை வீரராக மிரட்டியுள்ள பாக்ஸர் உள்ளிட்ட திரைப்படங்கள் அருண்விஜய் நடிப்பில் ரிலீசாக காத்திருக்கின்றன.

தொடர்ந்து இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் வாணிபோஜன் இணைந்து நடிக்கும் புதிய வெப்சீரிஸ் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் கமர்ஷியல் படங்களை வழங்கி வரும் இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் யானை. 

டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள யானை திரைபடத்தில் அருண் விஜய்யுடன் இணைந்து பிரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், சமுத்திரகனி, யோகிபாபு அம்மு அபிராமி மற்றும் விஜய் டிவி புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார் இசையமைக்க யானை திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் அதிரடியான ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக தயாராகியிருக்கும் யானை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியானது. நடிகர் அருண்விஜய் இதனை அறிவிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் யானை திரைப்படம் வருகிற மே 6-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.