“உக்ரைனுடனான போரில் ரஷ்யா இழந்தவை என்ன? உக்ரைன் இழந்தது என்ன?” என்பது பற்றிய சில விபரங்களை தற்போது பார்க்கலாம்.

ரஷ்யா - உக்ரைன் போர் தற்போது உச்சத்தில் இருந்து வருகிறது என்றே கூறலாம். இந்த போரில், அதிக போர் தளவாடங்களை கொண்டு உலக அளவில்  2 ஆம் இடத்தில் உள்ள ரஷ்யாவிற்கும், 22 வது இடத்தில் உள்ள உக்ரைனுக்கும் போர் நடந்துக்கொண்டிருப்பதால், இதில் உக்ரைனே அதிகமாக பாதிக்கப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில், உக்ரைனக்கு ஆதரவாக ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பல நாடுகளும் தங்களது போர் தளவாடங்களை கொடுத்து, உக்ரைனுக்கு ஆதரவாக நிற்பதால், ரஷ்யாவும் பொருளாதார அளவில் மிகப் பெரிய பாதிப்பை பெற்று உள்ளது.

அந்த வகையில், இந்த போரில் உக்ரைன் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறதோ, அதே அளவுக்கு வேறொரு வகையில் ரஷ்யாவும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளது என்றே கூறலாம்.

உக்ரைன் இழந்தது என்ன?

- உக்ரைனில் உள்ள 211 ராணுவ உள்கட்டமைப்புகளையும், அதில் இருந்த வீரர்களையும் அழித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு.

- கீவ் அவென்யூவில் அமைந்துள்ள இராணுவ தளத்தை ரஷ்ய துருப்புக்கள் தாக்கி உள்ளன. ஆனால், இந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்து உள்ளது.

ரஷ்யா இழந்தது என்ன?

- 1,000 ரஷ்ய வீரர்களை கொன்றதா, உக்ரைன் ராணுவம் நேற்று அறிவித்தது.

- நேற்று மாலை நிலவரப்படி, மொத்தம் 3500 ராணுவ வீரர்களை ரஷ்யா இழந்து உள்ளது.

- 80 டாங்கிகள்

- 536 கவச போர் வாகனங்கள்

-  8 ஹெலிகாப்டர்கள்

- 14 போர் விமானங்கள்

- 20 க்ரூஸ் ஏவுகணைகளை அழித்துள்ளதாக உக்ரைன் நேற்று தெரிவித்தது.

- 102 பீரங்கிகள் அழிப்பு

- 15 பீரங்கி துப்பாக்கிகள்

- 1 BUK ஏவுகணை அமைப்பு அழிப்பு

- எனினும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து ரஷ்ய ராணுவம் இது வரை எந்த ஒரு தகவலையும்யும் அதிகார பூர்வமாக வெளியிடவில்லை.

- இவைத் தரவி, ரஷ்யாவிற்கு பல்வேறு உலக நாடுகள் பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதித்து உள்ளது. இதனால், உலக நாடுகளில் இருந்து ரஷ்யா தற்போது தனித்துவிடப்பட்டு உள்ளது.

- இப்படியாக, இரு நாடுகளும் சம அளவில் இழப்புகளை சந்தித்து வரும் நிலையில், உக்ரைனும் - ரஷ்யாவும் பேச்சு வார்த்தைக்கான இடம் மற்றும் நேரம் குறித்து விவாதித்து வருவதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.