தொடரும் அஜித்தின் வலிமை பட வசூல் வேட்டை-பாக்ஸ் ஆஃபீஸ் நிலவரம் இதோ!
By Anand S | Galatta | February 27, 2022 17:12 PM IST
காவல்துறை அதிகாரியாக அஜித் குமார் மிரட்டியுள்ளார் வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்திய திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான அஜித்குமாரின் வலிமை திரைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்திருந்தார்.
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று & நேர்கொண்டபார்வை படங்களின் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள அதிரடி ஆக்சன் திரைப்படமான வலிமை படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இசையமைப்பாளர் ஜிப்ரான் பின்னணி இசை சேர்க்க, திலிப் சுப்புராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்குப் பிறகு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த வலிமை திரைப்படம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளது. வலிமை திரைப்படத்தின் அனைத்து ஸ்டண்ட் மற்றும் பைக் சேசிங் ஸ்டண்ட் காட்சிகளும் படமாக்கப்பட்ட விதமும் பிரமிக்க வைத்துள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் & ஹிந்தி என நான்கு மொழிகளில் வெளிவந்துள்ள வலிமை திரைப்படம் தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக திரையரங்குகளில் திருவிழாவாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் வலிமை படம் பாக்ஸ் ஆஃபீஸில் 100 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Woo hoo ! Thank you for all the love #Valimai #AjithSir @BoneyKapoor pic.twitter.com/Vl8OLu32pQ
— Huma S Qureshi (@humasqureshi) February 27, 2022