படத்திற்கு படம் தன்னை தானே மெருகேற்றி உலக அளவில் குறிப்பிடப்படும் நடிகராக உயர்ந்து நிற்கும் நடிகர் தனுஷ் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் ஏகோபித்த வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாகியுள்ளது. அடுத்ததாக, பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில்  வாத்தி படத்தில் நடித்து வருகிறார்.

முன்னதாக மயக்கம் என்ன திரைப்படத்திற்கு பின் மீண்டும் தனது சகோதரரும் இயக்குனருமான செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் நானே வருவேன். ஹீரோ - வில்லன் என இரட்டை வேடத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தில் நடிகை இந்துஜா, பிரபு, யோகி பாபு, ஷெல்லி கிஷோர் ஆகியோருடன் இணைந்து இயக்குனர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பா.பாண்டி திரைப்படத்திற்கு பிறகு நானே வருவேன் திரைப்படத்தில் எழுத்தாளராக கதை திரைக்கதை வசனங்களை தனுஷ் எழுதியுள்ளார். கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் தயாரிப்பில் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள நானே வருவேன் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். நானே வருவேன் படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நானே வருவேன் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவித்து இயக்குனர் செல்வராகவன் புதிய போஸ்டர்களை வெளியிட்டுள்ளார். தனுஷின் இரண்டு வித்தியாசமான கதாபாத்திரங்களையும் கொண்ட இரண்டு சர்ப்ரைஸான போஸ்டர்கள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த போஸ்டர்கள் இதோ…
 

🙏🤓🙏#NaaneVaruven @theVcreations @dhanushkraja @thisisysr @omdop pic.twitter.com/lH3YbCQiRX

— selvaraghavan (@selvaraghavan) August 22, 2022