நடன இயக்குனர், இயக்குனர், நடிகர் என இந்திய திரையுலகில்  பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வரும் பிரபுதேவா இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பல வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ள சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் பஹீரா நீண்ட நாட்களாக ரிலீசுக்கு காத்திருக்கிறது.

தொடரந்து இயக்குனர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் இயக்கத்தில் மாற்று திறனாளியாக மிரட்டலான கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடித்த பொய்க்கால் குதிரை திரைப்படமும் விரைவில் வெளிவர தயாராகி வரும் நிலையில் தற்போது அதிரடி ஆக்ஷன் திரைப்படங்களாக தயாராகும் ரேக்ளா மற்றும் முஸாசிர் ஆகிய படங்களில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்து வருகிறார்.

முன்னதாக அபிஷேக் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் டான் சாண்டி இயக்கத்தில் பிரபுதேவா & ரெஜினா கெஸன்ட்ரா இணைந்து நடிக்கும் ஃபிளாஷ்பேக் திரைப்படமும் தயாராகி வரும் நிலையில் மீண்டும் அபிஷேக் பிலிம்ஸ் தயாரிப்பில் குழந்தைகள் கொண்டாடும் ஃபேண்டசி காமெடி திரைப்படமாக பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் மை டியர் பூதம். 

இயக்குனர் N.ராகவன் இயக்கத்தில் பிரபு தேவா, ரம்யா நம்பீசன் மற்றும் மாஸ்டர் அஸ்வந்த் இணைந்து நடித்துள்ள மை டியர் பூதம் படத்திற்கு D.இமான் இசையமைக்க U.K.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மை டியர் பூதம் திரைப்படம் வருகிற ஜூலை 15-ம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில்,  மை டியர் பூதம் திரைப்படத்தின் மேக்கிங் தற்போது வெளியானது. கலக்கலான அந்த வீடியோ இதோ…
 

. @PDdancing 's #MyDearBootham 🧞‍♂️ interesting making video, Fantasy world to unfold on July 15th @naviin2050 @immancomposer @nambessan_ramya @actorashwanth @samyuktha_shan @uksrr @Sanlokesh @onlyartmohan @editordeva85 @YugabhaarathiYb @gn_murugan @shankarsathyam1 pic.twitter.com/pm7Y41ykHu

— ABHISHEK FILMS (@Abhishek_films_) July 4, 2022