பொதுவாவே தமிழ்நாட்டு பசங்களுக்கு கேரளா பொண்ணுங்க மேல பெரிய Crush இருக்கும்.அப்படி கேரளால பிறந்து தமிழ்நாடு இளைஞர்கள் மனசுல கனவுகன்னியா பல பொண்ணுங்க இருந்துருக்காங்க.கேரளாவுல பிறந்து இப்போ நம்ம பசங்க இதயங்களை கொள்ளையடிச்சுக்கிட்டு இருக்க ஒரு பொண்ணு தான் டெல்னா டேவிஸ்.சன் டீவியோட சமீபத்திய சூப்பர்ஹிட் தொடர் அன்பே வா,அந்த சீரியல் ஹீரோயினா நடிச்சு அசத்திட்டு இருக்காங்க.அவங்களோட சீரியல் ரசிகர்கள் சார்பா அவங்ககிட்ட ஒரு Interview கேட்டோம் உடனே ஓகேன்னு சொல்லி நம்ம கேட்ட கேள்விக்கெல்லாம் டக்கு டக்குனு பதில் சொல்லிருக்காங்க.அவங்க சொன்ன சுவாரசியமான பதிலெல்லாம் என்னென்னன்னு பார்க்கலாம் வாங்க

anbe vaa serial fame delna davis an exclusive interview

சினிமாவுக்குள்ள வரணும் அப்படின்ற ஆசை எப்போ ஸ்டார்ட் ஆச்சு...?

நான் ஒரு கிளாசிக்கல் டான்சர்,ஸ்கூல் படிக்கும்போதே ஏகப்பட்ட போட்டிகள்ள கலந்துக்கிட்டு டான்ஸ் பண்ணிருக்கேன்,என்னோட டான்ஸ் குருவோட Friend சினிமால ஒர்க் பண்ணாரு அவர் மூலமா அப்படியே சினிமா என்ட்ரி தொடங்கியது.

49-O படத்துல கவுண்டமணி சாரோட நடிச்ச அனுபவம்…அவர் வந்து எல்லாரையுமே வெச்சு செஞ்சுருவாரு உங்களை அப்படி பங்கமா கலாய்ச்ச மொமெண்ட் ஏதாவது இருக்கா...?

அவரு கூட நடிக்க வாய்ப்பு கிடைச்சதே மிகப்பெரிய அதிர்ஷ்டம் அதுக்கு எப்பயுமே நன்றியோட இருப்பேன்.அவரப்போல ஒரு மகாநடிகர் கூட நடிக்கிறதெல்லாம் மிகப்பெரிய அனுபவம்,அவர் கிட்ட இருந்து நிறைய கத்துக்கிட்டேன்.எப்பயுமே யாரையாவது கலாய்ச்சுட்டு செம ஜாலியா இருப்பாரு என்னை ஷூட்டிங் ஸ்பாட்ல நிறைய தடவை சிரிக்க வெச்சுருக்காரு,Ofcourse என்னை மட்டும் எப்படி விடுவாரு என்னையும் நிறைய தடவை கலாய்ச்சுருக்காரு.

anbe vaa serial fame delna davis an exclusive interview

குரங்குபொம்மை உங்க Career-ல ஒரு முக்கியமான படம் அதை பத்தி சொல்லுங்க...?

குரங்குபொம்மை ஒரு அற்புதமான படம் அந்த படத்துல தான் என்னை நிறைய பேர் Notice பண்ணாங்க.சூப்பரான டைரக்டர் நித்திலனோட ஒர்க் பண்ண வாய்ப்பு கிடைச்சது.அந்த படத்தோட மேக்கிங்,Screenplay பத்தி இப்பவும் பல பேர் பேசுறத கேட்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு.

anbe vaa serial fame delna davis an exclusive interview

சினிமா To சீரியல் இந்த முடிவு எப்போ எடுத்தீங்க...?

நானும் சரி எங்க வீட்லயும் சரி படிப்புக்கு அதிகமா முக்கியத்துவம் கொடுப்போம்.என்னோட bachelors degree முடிஞ்சதுக்கு அப்பறம் பெங்களூர்ல law படிக்க சேர்ந்துட்டேன்.5 வருஷ கோர்ஸ் So படிப்புல Concentrate பண்ணேன்.குரங்குபொம்மைக்கு அப்பறமா ஒரு தமிழ் படம் கமிட் ஆனேன் சில காரணங்களால அந்த படம் நடக்காம போயிருச்சு.நான் படிக்கிறதை நிறுத்தாமல் Continue பண்ணேன்,இடையில சில வாய்ப்புகள் வந்தது,எனக்கு பெருசா interest இல்லாததால விட்டுட்டேன்.லாக்டவுன் அப்போ University Close ஆகி இருந்தது வீட்ல செமயா போர் அடிச்சது எதுமே பண்ணாம,அந்த டைம்ல Saregama productions அன்பே வா ஸ்கிரிப்டோட வந்தாங்க,கரெக்டான டைம்ல கிடைக்கவும் சரின்னு ஓகே சொல்லிட்டேன்.

anbe vaa serial fame delna davis an exclusive interview

சன் டிவியில ஒரு Primetime சீரியல் உங்க சீரியலுக்கும்,பூமிகாவுக்கும் மக்கள் மத்தியில வரவேற்பு எப்படி இருக்கு...?

குரங்குபோம்மை எனக்கு ஒரு அடையாளம் கொடுத்தது,அதற்கு அடுத்து நான் பண்ணது இந்த சீரியல் தான்,இதுக்கு மக்கள் இவ்ளோ அன்பு கொடுப்பாங்கனு நான் எதிர்பார்க்கல இந்த சீரியல் என்னை மக்கள்கிட்ட பிரபலமா மாத்திருச்சு.இப்போ எல்லாருக்குமே என்ன பூமிகான்னு தான் தெரியும் அந்த அளவு சீரியல் மக்களுக்கு பிடிச்சருக்கு.அவங்க வீட்ல இருக்க ஒரு பொண்ணா என்னை பார்க்குறாங்க.எனக்கு சின்னதா உடம்பு சரி இல்லனாலும் நான் குணமாகணும்னு அவ்ளோ பேர் வேண்டிக்கிறாங்க.அவங்க காமிக்கிற அன்பு தான் எங்களுக்கு பெரிய பூஸ்ட் அது எனக்கு நிறைய கிடைக்குது.

anbe vaa serial fame delna davis an exclusive interview

பூமிகாவுக்கும் உங்களுக்குமான ஒற்றுமைகள்/வேறுபாடுகள் ஏதாவது இருக்கா...?

ரெண்டு பேருமே அதிகமான பொறுப்பாகள் எடுத்துக்குவோம், யாரையும் புண்படுத்த மாட்டோம், அதோட ரெண்டு பேருமே பரதநாட்டிய கலைஞர்கள்.

ரோஜா சீரியல் டீமோட நடிச்ச அனுபவம்...? ரோஜா ஹீரோயின் பிரியங்கா நல்காரியோட உங்களோட Bonding பார்க்கவே மிகவும் அழகா இருக்கு அதை பத்தி சொல்லுங்க...?

ரோஜா டீம் எங்களோட குடும்பமா மாறிட்டாங்க,அவங்ககூட வேலைபார்த்து ஒரு மறக்கமுடியாத அனுபவமா இருந்தது.பிரியங்காவும் நானும் நல்ல நண்பர்களா மாறிட்டோம்,அடிக்கடி பேசிப்போம் முக்கியமா எதை பத்தி வேணாலும் பேசிப்போம் அந்த அளவு எங்க நட்பு ஸ்டராங்கா மாறிருச்சு.

anbe vaa serial fame delna davis an exclusive interview

இந்த கொரோனா நேரத்துல அவங்களுக்கு சில அட்வைஸ் கொடுக்கணும்னா என்ன சொல்லுவீங்க...?

மக்கள் எல்லாருமே தயவு செஞ்சு மாஸ்க் போடுங்க Sanitizer யூஸ் பண்ணுங்க,சூடான தண்ணி பயன்படுத்துங்க,நல்ல ஆரோக்கியமான உணவா சாப்பிடுங்க,நல்ல தூங்குங்க இதெல்லாம் பண்ணி இப்போ இருக்குற Situation நம்ம எல்லாருமே கடக்கணும்.

லாக்டவுன் எப்படி போகுது...?

லாக்டவுன்ல வீட்லயே இருக்கத்தால வீட்ல இருக்கவங்களோட அதிகமான நேரம் Spend பண்ண முடிஞ்சது,அதுதவிர Reading , dance , Netflix , prime,pets-ன்னு இப்படி பொழுது போக்குக்கு ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தது.

anbe vaa serial fame delna davis an exclusive interview

சினிமா/மீடியால உங்களோட மிகப்பெரிய Inspiration...?

Inspiration எப்பவுமே நடிகை பிரியங்கா சோப்ரா தான்.எனக்கு அவங்கள ரொம்ப பிடிக்கும்.அவங்க வாழ்க்கைல அவங்க பட்ட கஷ்டங்கள் இப்போ அவங்க இருக்குற இடம்ன்னு பல விஷயங்கள் அவங்கள பார்த்து வியந்து போயிருக்கேன்.

Dream Role அப்படின்னு ஏதாவது இருக்கா...?

English Vinglish ,Queen , Mary Kom , Pink இந்த படத்துல வர்ற பெண் கதாபாத்திரங்கள் மாதிரி ஸ்ட்ராங்கா  வித்தியாசமா நடிக்கணும்னு ஆசை.

Travel or Food...?

நிச்சயமா Travelling தான்.ரொம்ப ரொம்ப பிடிச்ச ஒரு விஷயம்.

anbe vaa serial fame delna davis an exclusive interview

டெல்னாவின் Celebrity Crush...? நடிச்சா இவங்களோட நடிக்கணும் அப்படின்னு நினைக்கிற சில டாப் ஹீரோக்கள்...?

தனுஷ் சார்,சூர்யா சார் ரெண்டு பேரையும் ரொம்ப பிடிக்கும்.அவங்க கூட நடிச்சா ரொமான்டிக் காமெடி படமாக நடிக்கணும்னு ஆசை.

இப்போ சீரியல்ல ரொம்ப பிஸியா இருக்கீங்க...திரும்பவும் சினிமாவுக்கு வரும் ஐடியா இருக்கா...?

இப்போதைக்கு Future Projects பத்தின ஐடியா இல்லை அது சீரியலா இருந்தாலும்,படமா இருந்தாலும் எனக்கு பிடிச்ச மாதிரி கதாபாத்திரங்கள் கிடைச்சா நிச்சயம் பண்ணுவேன்.இல்லன்னா என்னோட திரும்பவும் யூனிவர்சிட்டிக்கு போய் படிப்பை முடிக்கிறது தான் அடுத்து நான் வெச்சுருக்க ஒரே பிளான்.

anbe vaa serial fame delna davis an exclusive interview

அவங்களோட செம பிஸியான Schedule-லயும் நமக்காக டைம் ஒதுக்கி நம்ம கேட்ட எல்லா கேள்விக்கும் செம ஜாலியா பதில் சொன்னாங்க டெல்னா.அவங்களோட சீரியல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி பெரிய வெற்றியை அடையவும்,அவங்களோட Studies Succesful-ஆ Complete பண்ணவும்,அவங்களோட அடுத்த முயற்சிகள் எல்லாமே வெற்றி அடையவும் கலாட்டா சார்பாக வாழ்த்துக்களை தெரிவிச்சு நிறைவு செஞ்சோம்.