இயக்குனர் அமீர் இயக்கிய பருத்தி வீரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் கார்த்தி தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, பையா,சிறுத்தை, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், கைதி என தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அடுத்ததாக இந்தியாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியத்தேவன் என்னும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகர்கள் விக்ரம் ஜெயம் ரவி ஐஸ்வர்யாராய் திரிஷா என இந்தியாவின் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் மக்கள் திண்டாடி வரும் வேலையில் ஆறுதல் அளிக்கும் விதமாக தடுப்பூசி உதவி வருகிறது. இந்தியாவிலும் அனைவருக்கும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும்படி மருத்துவர்களும்  மத்திய மாநில அரசுகளும் அறிவுறுத்தி வந்தாலும் இன்னும் பல மக்களுக்கு தடுப்பூசி பற்றிய நிறைய குழப்பங்களும் பயமும் இருக்கத்தான் செய்கிறது. 

இதனையடுத்து பல முன்னணி பிரபலங்களும் தங்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தங்களால் முடிந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் நடிகர் கார்த்தி தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகர் கார்த்தியின் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அடுத்ததாக நடிகர் கார்த்தி இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் திரைப்படத்தில்  நடிக்க உள்ளார் ராசி கண்ணா கதாநாயகியாக நடிக்கும் இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.