கன்னடத்தில் சீரியல் ஹீரோவாக அறிமுகமாகி தற்போது தமிழில் சீரியல் ஹீரோவாக அசத்தி வருபவர் விக்ரம் ஸ்ரீ.கன்னடத்தில் சில சீரியல்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவர் அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பான சிவா மனசுல சக்தி தொடரில் ஹீரோவாக நடித்தார்.

இந்த சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவராக மாறினார் விக்ரம் ஸ்ரீ.350 எபிசோடுகளை கடந்து இந்த தொடர் நிறைவடைந்தது.இதனை தொடர்ந்து காற்றின் மொழி தொடரில் சிறப்பு தோற்றத்தில் நடித்து அசத்தினார் விக்ரம் ஸ்ரீ.இந்த தொடர்களின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.

ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அன்பே சிவம் தொடரில் ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார்.கவிதா கௌடா இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது.

சில நாட்களுக்கு முன் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சிறிய விபத்தால் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என சில புகைப்படங்களுடன் தெரிவித்துள்ளார்.அவர் விரைவில் குணமயடைய ரசிகர்கள் தனது பிரார்த்தனைகளை தெரிவித்து வருகின்றனர்.