விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான தொடர்களில் ஒன்று ராஜா ராணி.இந்த தொடரின் மூலம் பிரபலமானவர் மிகவும் பிரபலமானவர் ஹீரோயினாக நடித்த ஆல்யா மானசா.குறுகிய காலத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் இதயங்களில் இடம்பிடித்துவிட்டார்.இந்த தொடரில் இவரது நடிப்பை பலரும் பாராட்டி வந்தனர்.இவருக்கென்று ரசிகர்கள் பக்கங்கள்,வீடியோ எடிட்கள் என்று ரசிகர்கள் உருவாக்கி வந்தனர்.

இந்த தொடரில் ஹீரோவாக சஞ்சீவ் நடித்து வந்தார்.இவரும் இந்த தொடரின் மூலம் மிகவும் பிரபாலமானவராக மாறினார்,இவருக்கும் தனியொரு ரசிகர் பட்டாளமே இருந்தது.தனித்தனியாக ரசிகர் பக்கங்களை தாண்டி இருவருக்கும் சேர்த்து நிறைய ரசிகர் பக்கங்கள் உருவாகின.இவர்கள் ஜோடியாக மக்கள் மனதில் இடம்பிடிக்க இருவரும் நிஜத்திலும் ஜோடியாக மாறினர்.

இந்த தொடரில் ஹீரோவாக நடிக்கும் சஞ்சீவுக்கும் மானசாவுக்கும் காதல் மலர்ந்தது.இதனை அடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.சஞ்சீவ் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காற்றின் மொழி என்ற தொடரில் நடித்து வருகிறார்.ஆல்யா மானசா விஜய் டிவியின் பிரபல கேம் ஷோ ஒன்றில் நடுவராக இருந்து வந்தார்.இந்து நிகழ்ச்சி தற்போது நிறைவடைந்துள்ளது.

கொரோனா காரணமாக பிரபலங்கள் தங்கள் நேரங்களை சமூகவலைத்தளங்களில் செலவழித்து வருகின்றனர்.ஆல்யா மானசா சஞ்சீவ் தம்பதிக்கு சில மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது.இந்த குழந்தைக்கு ஐலா சையத் பெயரிட்டிருந்தனர்.மகளின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சஞ்சீவ் மற்றும் ஆலியா இருவரும் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து வந்தனர்.தற்போது ஆல்யா மானசா மகளின் கியூட்டான புதிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Baby girls are like flowers that are forever in bloom #Ailasyed

A post shared by alya_manasa (@alya_manasa) on