தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன்.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான Ala vaikunthapuramuloo திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.பட்டிதொட்டி எங்கும் வசூல்மழை ஈட்டியது இந்த படம்.

AlluArjun Pushpa Will Only Have Indian Technicians

இதனை தொடர்ந்து ரங்கஸ்தலம் பட இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் தயாராகி வரும் புஷ்பா படத்தில் நடிக்கவுள்ளார்.இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாகவும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடிக்கவுள்ளனர்.

AlluArjun Pushpa Will Only Have Indian Technicians

மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை  தயாரித்துள்ளனர்.தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் 6 நிமிட சண்டைக்காட்சிக்கு ரூ.6 கோடி ருபாய் செலவுசெய்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தது.தற்போது இந்த படம் முழுக்க முழுக்க இந்தியாவில் எடுக்கப்படும் இந்தியர்கள் மட்டுமே வேலை பார்க்கும் படமாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

AlluArjun Pushpa Will Only Have Indian Technicians