தமிழ் திரையுலகில் சிறந்த ஸ்கிரிப்ட்டுகளை தேர்தெடுத்து அதில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தும் ஹீரோக்களில் ஒருவர் சிபிராஜ். கடைசியாக அன்பரசன் இயக்கத்தில் வால்டர் படத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் கபடதாரி என்ற படத்தில் நடித்துள்ளார். நாசர், நந்திதா ஸ்வேதா, மயில்சாமி, ஜெயபிரகாஷ், ஜே.சதிஷ் குமார் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

Sibiraj Kabadadaari Movie Dubbing Starts

சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் கதையாக உருவாகிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்றது. சைமன் K கிங் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சத்யா படத்திற்கு பிறகு இந்த கூட்டணி இணைந்திருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Sibiraj Kabadadaari Movie Dubbing Starts Sibiraj Kabadadaari Movie Dubbing Starts

கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் உள்ளது. படப்பிடிப்பு இல்லாமல் நடிகர்கள் மற்றும் சினிமா சார்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் வீட்டிலே முடங்கியுள்ளனர். தற்போது இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் துவங்கியுள்ளது. படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் நடிகர் ஜெயபிரகாஷ், தனது டப்பிங்கை துவங்கினார்.