தமிழ் திரையுலகின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராகவும் முன்னணி இயக்குனராகவும் வலம் வரும் இயக்குனர் H.வினோத் சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து H.வினோத் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் மிகச் சிறந்த திரைப்படமாக கவனிக்கப்பட்டது.

இதனையடுத்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் அஜித்குமார் உடன் இணைந்த இயக்குனர் H.வினோத் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான பின்க் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இயக்கினார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2-வது முறையாக மீண்டும் அஜீத் குமாருடன் இணைந்து வினோத் இயக்கத்தில் தயாரானது வலிமை திரைப்படம்.

காவல்துறை அதிகாரியாக மிரட்டலான கதாபாத்திரத்தில் அஜித் குமார் நடித்துள்ள வலிமை திரைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அஜித்குமார் அடுத்து நடிக்கும் #AK61 திரைப்படத்தையும் போனிகபூர் தயாரிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்படத்தையும் இஇயக்குனர் H.வினோத் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வலிமை படத்தில் ஹுமா குரேஷி சுமித்ரா யோகிபாபு விஜய் டிவி புகழ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். முன்னணி ஸ்டன்ட் இயக்குனர் திலிப் சுப்புராயன் ஸ்டண்ட் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ஆக்சன் த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் வலிமை படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். 

இந்நிலையில் வருகிற பிப்ரவரி 24ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள வலிமை திரைப்படத்தின் மிரட்டலான புதிய ப்ரோமோ வீடியோ தற்போது வெளியானது. அந்த ப்ரோமோ வீடியோ இதோ…