தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் மகேஷ்பாபு.மாஸ் ஹீரோவாக உருவெடுத்து தெலுங்கு சினிமாவின் சூப்பர்ஸ்டாராக அசத்தி வருகிறார் மகேஷ்பாபு.கடைசியாக இவர் நடிப்பில் Sarileru Neekevvaru படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து இவர் கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் உருவாகி வரும் Sarkaru Vaari Paata படத்தில் நடித்து வருகிறார்.கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் டீஸர் மற்றும் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதனை அடுத்து இவர் SSMB 28 படத்தில் நடிக்கவுள்ளார் இந்த படத்தினை தெலுங்கின் முன்னணி இயக்குனர் த்ரிவிக்ரம் இயக்கவுள்ளார்.பூஜா ஹெக்டே இந்த படத்தின் ஹீரோயினாக நடிக்கிறார்.பிரபல இசையமைப்பாளர் தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தில் வில்லனாக தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான விக்ரம் நடிக்கிறார் என்ற தகவல் பரவி வந்தது.இந்நிலையில் மகேஷ்பாபு படத்தில் விக்ரம் நடிப்பதாக வந்த தகவல் உண்மையல்ல வெறும் வதந்தி தான் என்று விக்ரம் தரப்பில் இருந்து தெளிவுபடுத்தியுள்ளனர்.