“என் அப்பா அம்மா செய்த புண்ணியம்” நடிகர் சூரி நெகிழ்ச்சி – வைரலாகும் பதிவு இதோ..

இசைஞானி இளையராஜா குறித்து நெகிழ்ந்து பேசிய நடிகர் சூரி -  Actor Soori tweet about maestro ilaiyaraja | Galatta

தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை திரைப்படம். தொடர் வெற்றிகளை குவித்து வரும் இயக்குனர் வெற்றிமாறன் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ஏமாற்றத்தை கொடுத்ததில்லை. அந்த வகையில் இயக்குனர் வெற்றிமாறன் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் துணைவன் சிறுகதையை தழுவி எடுத்து கொண்டிருக்கும் திரைப்படம் ‘விடுதலை’ இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் சூரி நடிக்கவுள்ளார். இவருடன் நடிகர் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் இணைந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன், சேத்தன் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் விடுதலை திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

RS இன்ஃபோடைன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள விடுதலை திரைப்படத்திற்கு R.வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியிட வெற்றி மாறன் முடிவு செய்துள்ளார். அதன் படி விடுதலை படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இசைஞானி இளையராஜா இசையில் விடுதலை படத்தில் முதல் பாடல் ‘ஒன்னோட  நடந்தா நேற்று வெளியானது. சுகா வரிகளில் நடிகர் தனுஷ் இந்த பாடலை பாடியிருந்தார். இந்த பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இளையராஜா இசையில் தனுஷ் பாடும் முதல் பாடல் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

pizza the mummy new song kanne kanmaniye song released

இந்த பாடல் பல இடங்களில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் படத்தின் நாயகன் நடிகர் சூரி தனது சமூக வலைதளத்தில் இளையாரஜாவுடன் நிற்கும் புகைபாடத்தை பகிர்ந்து அதனுடன், “என் அப்பா அம்மா செய்த புண்ணியம் , என் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம், இசைஞானி இளையராஜா ஐயாவின் முத்தான பாடலில் எனக்கு நடிக்க கிடைத்த இந்த வாய்ப்பு. இதை ஏற்படுத்தி தந்த வெற்றிமாறன் அண்ணனுக்கும், பாடலாசிரியர் சுகா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து சூரியின் பதிவு இணையத்தில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

என் அப்பா அம்மா செய்த புண்ணியம் , என் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்,இசைஞானி @ilaiyaraaja ஐயாவின் முத்தான பாடலில் எனக்கு நடிக்க கிடைத்த இந்த வாய்ப்பு. இதை ஏற்படுத்தி தந்த வெற்றிமாறன் அண்ணனுக்கும், பாடலாசிரியர் சுகா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் #ViduthalaiPart1 pic.twitter.com/0sGJBa4LEW

— Actor Soori (@sooriofficial) February 8, 2023

மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொண்டுள்ள விடுதலை திரைப்படம் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வினியோகஸ்த உரிமத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

சிம்புவின் ‘பத்து தல’ திரைப்படம் தொட்டி ஜெயா 2? இயக்குனர் ஒபெலி N. கிருஷ்ணாவின் சுவாரஸ்யமான பதில் – முழு வீடியோ இதோ..
சினிமா

சிம்புவின் ‘பத்து தல’ திரைப்படம் தொட்டி ஜெயா 2? இயக்குனர் ஒபெலி N. கிருஷ்ணாவின் சுவாரஸ்யமான பதில் – முழு வீடியோ இதோ..

‘டீசல்’ படத்தின் அட்டகாசமான அப்டேட்.. வேற மாதிரி களம் இறங்க போகும் ஹரிஷ் கல்யாண் - வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

‘டீசல்’ படத்தின் அட்டகாசமான அப்டேட்.. வேற மாதிரி களம் இறங்க போகும் ஹரிஷ் கல்யாண் - வைரலாகும் வீடியோ இதோ..

தனுஷின் ‘வாத்தி’ இசை வெளியீட்டு விழா.. தொலைக்காட்சி வெளியீடு எப்போது.. – அட்டகாசமான அறிவிப்பு வீடியோ..
சினிமா

தனுஷின் ‘வாத்தி’ இசை வெளியீட்டு விழா.. தொலைக்காட்சி வெளியீடு எப்போது.. – அட்டகாசமான அறிவிப்பு வீடியோ..