இணையத்தில் வைரலாகும் தனுஷின் நானே வருவேன் பட புகைப்படங்கள் !
By Aravind Selvam | Galatta | September 16, 2022 16:28 PM IST

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நானே வருவேன்.காதல் கொண்டேன்,புதுப்பேட்டை,மயக்கம் என்ன படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக செல்வராகவன் தனுஷுடன் இணைந்துள்ளதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த படத்தினை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தில் இந்துஜா,யோகி பாபு,ஸ்வீடன் நடிகை Elli AvrRam,செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் செப்டம்பரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் டீஸர் நேற்று வெளியாகி சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் அடித்து வருகிறது.
படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.படத்தின் புது ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சிலவற்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.செம மாஸான இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகின்றன.
Exclusive HD Photos For #NaaneVaruvenTeaser #NaaneVaruvean @dhanushkraja @selvaraghavan @theVcreations @thisisysr @omdop pic.twitter.com/qNqP81vWcj
— ⚖ கார்த்திக் ⚖ (@NiTin_KarThi) September 16, 2022