புகழ்மிக்க பழம்பெறும் இயக்குனரும் நடிகருமான K.விஸ்வநாத் காலமானார்... சோகத்தில் திரையுலகம்!

பழம்பெரும் இயக்குனரும் நடிகருமான Kவிஸ்வநாத் காலமானார்,Legendary director actor k vishwanath passed away | Galatta

இந்திய சினிமாவின் மிகப்பெரிய ஆளுமைகளில் ஒருவராக, புகழ்மிக்க இயக்குனராக எண்ணற்ற சிறந்த கலை படைப்புகளை கொடுத்த இயக்குனர் K.விஸ்வநாத் அவர்கள் தற்போது காலமானார். கடந்த 1965 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த ஆத்ம கௌரவம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான K.விஸ்வநாத் தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

குறிப்பாக செல்லல்லி கப்பூரம், காலம் மரிண்தி, சாரதா, ஓ சீதா கதா, ஜீவன ஜோதி, சங்கராபரணம், சபாபதி, காம்ச்சர், சுபலேகா, சாகர சங்கமம், சுவாதி முத்யம், ஸ்ருதிலையலு, ஸ்வர்ணகமலம், ஆவட்பாந்தவுடு, சுபசங்கல்பம், ஸ்வராபிஷேகம் உள்ளிட்ட இவரது இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள் காலத்தால் அழியாத பொக்கிஷங்களாக திகழ்கின்றன. குறிப்பாக கமல்ஹாசன் உடன் K.விசுவநாத் அவர்கள் இணைந்து வெளிவந்த சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகிய திரைப்படங்கள் மொழிகளை கடந்து அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டன.

இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் கமல்ஹாசனின் குருதிப்புனல், அஜித்தின் முகவரி, தளபதி விஜயின் பகவதி மற்றும் புதிய கீதை, தனுஷின் யாரடி நீ மோகினி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லிங்கா, உலகநாயகன் கமல்ஹாசனின் உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தவர் K.விஸ்வநாத் அவர்கள். 

ஆகச்சிறந்த படைப்புகளை வழங்கிய இயக்குனர் K.விஸ்வநாத் அவர்களுக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது கடந்த 1992 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது இதுவரை தனது படைப்புகளுக்காக 6 தேசிய விருதுகள் 8 நன்றி விருதுகள் 10 ஃபிலிம் சார் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை K.விஸ்வநாத் வென்றுள்ளார்.

இந்நிலையில் உடல்நல குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குனர் K.விஸ்வநாத் அவர்கள், நேற்று பிப்ரவரி 2ஆம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி காலமானார். இந்திய திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பழம்பெரும் இயக்குனர் K.விஸ்வநாத் அவர்களின் மறைவுக்கு கலாட்டா குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் திரை பிரபலங்களும் கோடான கோடி ரசிகர்களும் K.விஸ்வநாத் அவர்களின் மறைவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
 

இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் கே.விஸ்வநாத் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 92.#Viswanath #RipViswamath #KViswanath pic.twitter.com/psvS1bBmi5

— Galatta Media (@galattadotcom) February 2, 2023

ராஜா ராணி 2 நடிகருக்கும் பிரபல சீரியல் நடிகைக்கும் விரைவில் டும் டும் டும்... குவியும் வாழ்த்துக்கள்! விவரம் உள்ளே
சினிமா

ராஜா ராணி 2 நடிகருக்கும் பிரபல சீரியல் நடிகைக்கும் விரைவில் டும் டும் டும்... குவியும் வாழ்த்துக்கள்! விவரம் உள்ளே

விஜய் உடன் மாநகரம் & மைக்கேல் நடிகர் சந்தீப் கிஷன்... ட்ரெண்டாகும் தளபதி 67 படப்பூஜையின் புதிய புகைப்படம்!
சினிமா

விஜய் உடன் மாநகரம் & மைக்கேல் நடிகர் சந்தீப் கிஷன்... ட்ரெண்டாகும் தளபதி 67 படப்பூஜையின் புதிய புகைப்படம்!

சிலம்பரசன்TRன் பத்து தல படத்தின் மாஸான நம்ம சத்தம்… மிரட்டலான முதல் பாடலின் GLIMPSE வீடியோ இதோ!
சினிமா

சிலம்பரசன்TRன் பத்து தல படத்தின் மாஸான நம்ம சத்தம்… மிரட்டலான முதல் பாடலின் GLIMPSE வீடியோ இதோ!