தளபதி 67 பட டைட்டில் LCU-வை உறுதி செய்யுமா..? அறிவிப்பு போஸ்டர்களில் ஒத்துபோகும் CODE:RED - மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

தளபதி 67 பட அறிவிப்பு போஸ்டர் ஏற்படுத்திய எதிர்பார்ப்பு,thalapathy 67 title announcement poster connects kaithi and vikram | Galatta

மாஸ்டர் மாபெரும் வெற்றி பெற்றபோதும் 50 சதவீதம் விஜய் படமாகவும் 50 சதவீதம் தனது படமாகவும் தான் திட்டமிட்டு படத்தை உருவாக்கியதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்து இருந்தார். தொடர்ந்து கமல்ஹாசனின் தீவிர ரசிகராக ஒரு ஃபேர் பாய் சம்பவமாக விக்ரம் படத்தை செதுக்கிய லோகேஷ் கனகராஜுக்கு அதற்கு பலனாக பிளாக்பஸ்டர் வெற்றியும் கிடைத்தது. மேலும் விக்ரம் மற்றும் கைதி ஆகிய படங்களுக்கு இருந்த கனெக்ட் LCU என்ற ஒரு யுனிவர்சையே உருவாக்கியது.

இந்த நிலையில் தற்போது செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 67 திரைப்படம் LCUல் சேருமா என்ற எதிர்பார்ப்பும் தற்போது அதிகரித்துள்ளது. முன்னதாக கடந்த ஓரிரு தினங்களாக தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்தின் அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளிவரும் நிலையில் நாளை பிப்ரவரி 3ஆம் தேதி தளபதி திரைப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என தற்போது அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அறிவிக்கும் வகையில் முன்னணி போஸ்டர் டிசைனர் கோபி பிரசன்னா அவர்களின் கைவண்ணத்தில் ரத்தம் தெறிக்க தெறிக்க ரத்தத்தில் வரைந்தது போன்ற ஒரு போஸ்டரை படக்குழு வெளியிட்டு டைட்டில் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவித்திருந்தனர். அது விக்ரம் திரைப்படத்திற்கு வெளிவந்த டைட்டில் அறிவிப்பு ப்ரோமோ வீடியோவை போன்று ஒரு ப்ரோமோ வீடியோவாக இருக்கும் என்றும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இதனிடையே முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்து LCUவில் இடம் பெற்றுள்ள கைதி மற்றும் விக்ரம் ஆகிய திரைப்படங்களின் அறிவிப்பு போஸ்டர்களும் தளபதி 67 திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டரோடு ஒப்பிட்டு சில தொடர்புகளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

அந்த வகையில் கைதி திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டரிலும் தளபதி 67 திரைப்படத்தின் இந்த அறிவிப்பு போஸ்டரிலும் ரத்தம் (ரத்தத்தில் வரைந்தது) கிட்டதட்ட ஒரே மாதிரியாக ஒத்துப் போகிறது. மேலும் விக்ரம் திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டரும் பேக்ரவுண்டில் ரத்தம் போன்ற சிகப்பு நிறத்திலும் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் சூழ்ந்தும் காணப்பட்டது. குறிப்பாக அதில் CODE : RED என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த CODE : RED விக்ரம் திரைப்படத்திலும் வசனங்களில் இடம் பெற்றது. இது இப்போது தளபதி 67 திரைப்படத்திலும் ஒத்துப்போவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். எனவே தளபதி 67 திரைப்படத்தின் டைட்டில் வெளியாகும் போது, அது LCUவையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விடும் என தற்போது தகவல்கள் பரவி வருகின்றன. இது குறித்த உண்மை நாளை 5 மணிக்கு வெளியாகிவிடும்.
 

விஜய் - லோகேஷ் கனகராஜன் அதிரடியான தளபதி 67... மிரட்டலான டைட்டில் அறிவிப்பு போஸ்டர் உருவான விதம் இதோ!
சினிமா

விஜய் - லோகேஷ் கனகராஜன் அதிரடியான தளபதி 67... மிரட்டலான டைட்டில் அறிவிப்பு போஸ்டர் உருவான விதம் இதோ!

ராஜா ராணி 2 நடிகருக்கும் பிரபல சீரியல் நடிகைக்கும் விரைவில் டும் டும் டும்... குவியும் வாழ்த்துக்கள்! விவரம் உள்ளே
சினிமா

ராஜா ராணி 2 நடிகருக்கும் பிரபல சீரியல் நடிகைக்கும் விரைவில் டும் டும் டும்... குவியும் வாழ்த்துக்கள்! விவரம் உள்ளே

விஜய் உடன் மாநகரம் & மைக்கேல் நடிகர் சந்தீப் கிஷன்... ட்ரெண்டாகும் தளபதி 67 படப்பூஜையின் புதிய புகைப்படம்!
சினிமா

விஜய் உடன் மாநகரம் & மைக்கேல் நடிகர் சந்தீப் கிஷன்... ட்ரெண்டாகும் தளபதி 67 படப்பூஜையின் புதிய புகைப்படம்!