தமிழ் திரையுலகில் உச்ச நட்சித்திரமாக ஜொலிக்கும் அஜித் குமார் நடிப்பில் அடுத்த ஆண்டு (2022) பொங்கல் விருந்தாக வருகிற ஜனவரியில் ரிலீஸாகவுள்ள திரைப்படம் வலிமை. சதுரங்கவேட்டை, தீரன் மற்றும் நேர்கொண்டபார்வை படங்களை இயக்கிய இயக்குனர் H.வினோத் வலிமை திரைப்படத்தை இயக்கியுள்ளார். 

முன்னணி தயாரிப்பாளர் போனி கபூரின் பே வியூ ப்ராஜெக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள வலிமை திரைப்படத்தில் அஜித்குமார் உடன் இணைந்து ஹூமா குரேஷி, யோகி பாபு, விஜய் டிவி புகழ் ஆகியோர் நடிக்க, மிரட்டலான வில்லனாக கார்த்திகேயா நடித்துள்ளார். அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள வலிமை படத்தில் திலிப் சுப்புராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார். 

சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ள வலிமை படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதுவரை வெளியான வலிமை மோஷன் போஸ்டர் ,Glimpse, மேக்கிங் வீடியோ & வலிமை விசில் தீம் வீடியோ உட்பட அனைத்தும்  ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக அஜித்தின் மாஸ்ஸான வலிமை திரைப்படத்தின் பிரத்யேக புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ட்ரெண்டாகி வரும் இந்தப் புகைப்படங்கள் சோசியல் மீடியாவை அதிர வைத்துள்ளது. அஜித்தின் வலிமை பட புகைப்படங்கள் இதோ…