“புதிதாக அவதரித்துள்ள பெண் சாமியார் அன்னபூரணியை கைது செய்யக் கோரி” சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் தமிழ்நாடு இந்து சேவா சங்கம் உள்ளிட்ட 5 இந்து அமைப்புகள் புகார் அளித்து உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு எப்போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரை செய்து வழிபட்டு செய்வது வழக்கம்.

அந்த வகையில், “நான் தான் ஆதிபராசக்தியின் புதிய அவதாரம்” என்று கூறிக்கொண்டு அன்னபூரணி என்ற பெண், வித விதமான புதிய புதிய வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு, பெரும் அதிர்ச்சியை கிளப்பினார். இதனைப் பார்த்த தமிழக மக்கள் கடும் அதிர்ச்சியடைந்த நிலையில், பெண் சாமியார் அன்னபூரணியும் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கினார்.

அதன் படி, கடந்த சில நாட்களாகவே இணைய பக்கங்களில் பெண் சாமியார் அன்னபூரணி, பேசும் பொருளாகவே மாறி உள்ளார். இதனால், இவரைப் பற்றிய செய்திகள் இணையத்தில் பெரும் வைரலாகி வருகின்றன.

இப்படியாக, கடந்த சில நாட்களாக ட்ரெண்ட் ஆகி வரும் பெண் சாமியார் அன்னபூரணி அம்மாக்கு மொத்தம் 3 கணவர்கள் இருப்பதாகவும், ஆனால் அவர் தற்போது 4 வதாக ஒருவருடன் வாழ்ந்து வருவதாகவும், இன்று காலை முதல் செய்திகள் வெளியாகி இணையத்தில் பெரும் பரபர்பபை ஏற்படுத்தியது. இது தொடர்பான செய்திகளும் இன்றும் பெரும் ட்ரெண்டாகி வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், “தன்னைத் தானே கடவுளின் அவதாரம் என்று பொய் பரப்புரை செய்து வரும் போலியான பெண் சாமியார் அன்னபூரணியை  கைது செய்ய கோரி” தமிழ்நாடு இந்து சேவா சங்கம், பாரத் முன்னணி உள்ளிட்ட 5 இந்து அமைப்புகள் சார்பில் சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் இன்று புகார் அளிக்கப்பட்டது.

அதன்படி, தமிழக இந்து சேவா சங்கம், பாரத் முன்னணி உள்ளிட்ட 5 இந்து அமைப்புகள் சார்பில் சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ள புகாரில், “அன்னபூரணி அம்மா என்ற பெயரில் போலிச் சாமியாராக வலம் வந்து, தன்னை கடவுளின் அவதாரம் எனக்கூறி கடவுளை சொச்சைப்படுத்தும் இந்த பெண்ணை உடனே கைது செய்ய வேண்டும்” என்று, அந்த புகாரில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும், தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் அன்னபூரணி அரசு அம்மா என்பவரைக் கைது செய்ய இந்து அமைப்புகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. 

இதே போல், “சர்ச்சைக்குறிய சாமியார் அன்னபூரணி அம்மாவை கைது செய்யக் கோரி” இந்து மக்கள் கட்சி சார்பிலும் செங்கல்பட்டு மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

அந்த புகார் மனுவில், “இந்து மத நம்பிக்கைகளையும், சடங்குகளையும் அவமானப்படுத்தும் விதமாக அன்னபூரணி அம்மா செயல்பட்டு வருவதாகவும்” அதில், குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. 

இதனால், சர்ச்சை சாமியார் அன்னபூரணி எப்போதும் வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால், இணையத்தில் இந்த செய்தி மீண்டும் வைரலாக தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.