கன்னடத்தில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் அதிதி பிரபுதேவா.மாடல் ஆக தனது திரை வாழ்க்கையை தொடங்கி பின்னர் கன்னட சீரியல்களில் என்ட்ரி கொடுத்தார்.சீரியல்களில் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் அதிதி பிரபுதேவா.

அடுத்ததாக சினிமாவிலும் தனது என்ட்ரியை கொடுத்தார் அதிதி பிரபுதேவா.கன்னட சினிமாவில் இவர் நடித்த சில படங்கள் ஹிட் அடிக்க கன்னட சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய இளம் நடிகைகளில் ஒருவராக அவதரித்தார் அதிதி பிரபுதேவா.

இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகியுள்ள சில படங்கள் ரிலீசுக்கு ரெடி தயாராக உள்ளன.இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் அதிதி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.

தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது என்ற தகவலை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.இவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.திருமண தேதி மற்றும் தனது வருங்கால கணவர் குறித்த தகவல்களை அவர் விரைவில் பகிருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.