தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் சமந்தா.தனது நடிப்பாலும் அழகாலும் பல ரசிகர்களை பெற்றிருந்தார் சமந்தா.பல முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்துவிட்டு சமந்தா அடுத்ததாக தனி ஹீரோயினாகவும் பல படங்களில் நடித்து அசத்தினார்.

இவற்றை தவிர பேமிலி மேன் 2 வெப் சீரிஸில் முக்கிய வேடத்தில் நடித்து பெரிய வரவேற்பை பெற்றார் சமந்தா.அடுத்ததாக சகுந்தலம் மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தயாராகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல்,Dream Warrior Pictures தயாரிப்பில் ஒரு படம்,யசோதா என பிஸியாக உள்ளார் சமந்தா.

இவற்றை தவிர முதன்முறையாக அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்தில் ஒரு பாடலில் சிறப்பு தோற்றத்தில் தோன்றவுள்ளார் சமந்தா.இவர் ஒரு ஆங்கில படத்தில் நடிப்பதை சமீபத்தில் அறிவித்துள்ளார்.Arrangement of Love என்ற நாவலை தழுவி இந்த படம் உருவாகிறது.இவர் நடிக்கும் யசோதா என்ற படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியது.

இவர் புஷ்பா படத்தில் நடனமாடிய பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று செம ஹிட் அடித்தது.பெரிய ஹிட் அடித்தாலும் பல சர்ச்சைகளையும் இந்த பாடல் சந்தித்தது,பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்த பாடல் உலகளவில் அதிகம் கேட்கப்பட்ட பாடல்கள் வரிசையில் யூடியூபில் முதல் இடத்தை பிடித்துள்ளது.யூடியூப்பின் குளோபல் டாப் 100 லிஸ்டில் முதல் இடம் பிடித்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

samantha ruth prabhu oo antava song tops youtube global top 100 pushpa