பிரபல மாடலாக இருந்து பின்னர் ஓகே கண்மணி உள்ளிட்ட சில திரைப்படங்களில் சில கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியவர் அஷ்வின்.இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரெட்டைவால் குருவி,நினைக்க தெரிந்த மனமே உள்ளிட்ட தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக மாறினார் அஷ்வின்.

விஜய் டிவியை கலக்கி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் முக்கிய போட்டியாளர்களில் பங்கேற்று பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவராக மாறினார் அஷ்வின்.இந்த தொடரின் மூலம் கனவுகண்ணனாக விரைவில் உருவெடுத்தார் அஷ்வின்.இவர் குக் வித் கோமாளி சீசன் 2 போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்து அசத்தினார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை அடுத்து குட்டி பட்டாஸ்,கிரிமினல் க்ரஷ்,Loner,அடிபொலி உள்ளிட்ட ஆல்பம் பாடல்களில் நடித்திருந்தார் அஷ்வின்.இந்த பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இதனை தொடர்ந்து trident ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்ன சொல்ல போகிறாய் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் அஷ்வின்.

இதற்கிடையே இவர் நடித்த யாத்தி யாத்தி என்ற ஆல்பம் பாடல் வெளியானது,இந்த பாடலில் ஹர்ஷதா விஜய் நடித்துள்ளார்.அபிஷேக் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார்.கொண்டாட்டமான இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.இந்த பாடல் வீடியோ தற்போது 25 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.