விடாமுயற்சி ஷூட்டிங்கிற்கு முன் அஜித் ரசிகர்களுக்கு கிடைத்த சர்ப்ரைஸ்... இணையத்தை கலக்கும் அரேபிய ஒடிசி பைக் ரைடிங் வீடியோ!

அஜித் குமாரின் அரேபிய ஒடிசி பைக் ரைடிங் வீடியோ,Ajith kumar arabian odyssey bike riding video out now | Galatta

தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை கொண்ட நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு பைக் ரைடிங்கின் மீது மிகப்பெரிய ஆர்வம் இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான் அந்த வகையில் தற்போது ஐக்கிய அரபு நாடுகளில் பைக் ரைடிங்கில் ஈடுபட்டிருக்கும் நடிகர் அஜித்குமார் அவர்களின் அரேபிய ஒடிசி பைக் ரைடிங் வீடியோ ஒன்று தற்போது வெளிவந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பல கோடி சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகர்களில் ஒருவரான அஜித்குமார் முன்னதாக இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் நடித்த துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் வெளியீடாக வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து தனது திரைப் பயணத்தில் 62 வது திரைப்படமாக அஜித் குமார் நடிக்கும் AK62  திரைப்படத்தின் அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். 

கடந்த சில வாரங்களுக்கு முன்பு லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகும் AK62 திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குவதாகவும் இப்படத்திற்கு விடாமுயற்சி என பெயரிடப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்க இருக்கிறார். கடந்த சில வாரங்களாகவே எப்போது விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் விடாமுயற்சி திரைப்படத்திற்கான அப்டேட்கள் வெளிவரும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், ஒரு தரமான படைப்பாக விடாமுயற்சி படத்தை வழங்குவதற்காக பட குழுவினர் முதற்கட்ட பணிகளில் மிகவும் கவனம் செலுத்தி வந்ததாகவும் விரைவில் அக்டோபர் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தகவல்கள் வந்தன. தற்போது அக்டோபர் மாதம் தொடங்கியிருப்பதால் அடுத்த ஒரு சில தினங்களில் படப்பிடிப்பு குறித்து அறிவிப்பு வெளிவரும் என்றும் இந்த மாதத்திற்குள் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளி வரும் தெரிகிறது.

முன்னதாக “பரஸ்பர மரியாதைக்கான பயணம்” என்ற பெயரில் உலக பைக் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் திட்டத்தை தொடங்கிய அஜித்குமார் அதன் முதல் பகுதியாக நேதாளம் பகுதியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார். கடந்த மே 8ஆம் தேதியோடு இந்த சுற்றுப்பயணம் நிறைவடைந்த நிலையில், அடுத்த கட்ட சுற்றுப்பயணத்தை நவம்பரில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது “ஏகே மோட்டா ரைடு” என்ற புதிய மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை அஜித்குமார் தொடங்கினார். இதற்கு பல தரப்பில் இருந்தும் நல்ல வரவேற்பும் பாராட்டுகளும் கிடைத்தது. இந்த நிலையில் தற்போது ஓமன் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் தனது பைக் ரைடிங்கை தொடர்ந்து வரும் அஜித் குமாரின் புதிய வீடியோ ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. இந்த 2023 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில் அரேபிய ஒடிசி என்ற பெயரில் நடைபெறும் பைக் ரைடங்கில் கலந்து கொள்வதற்காக அழைப்பு விடுக்கும் வகையில் பிரபல தனியார் பைக் ரைடிங் நிறுவனம் அஜித்குமார் பைக் ரைடிங் செய்யும் அதிரடியான வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அந்த வீடியோ இதோ…
 

The time has come and get ready to unleash the " Arabian Odyssey " this December 2023.. An ultimate experience of Riding through mountains , oasis and white sand torquoise Blue beaches ...
Call or DM to book a ride!#ridewithvenus pic.twitter.com/bs1Y4uydqj

— Venus Motorcycle Tours (@VenusMotoTours) September 30, 2023