"அக்டோபர் 2-3 தேதிகளில்.."- தளபதி விஜயின் லியோ படக்குழுவின் ஸ்பெஷல் திட்டம்.. தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் இதோ!

தளபதி விஜயின் லியோ படக்குழுவின் ஸ்பெஷல் திட்டம்,dhanajeyan about thalapathy vijay special appearance for leo movie | Galatta

மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணியில் உருவாக்கி இருக்கும் லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. முன்னதாக இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதால் பீஸ்ட் திரைப்படத்தின் பாணியில் தளபதி விஜயின் ஸ்பெஷல் பேட்டி அல்லது வேறு சில ஸ்பெஷல் விஷயங்கள் இருக்குமா? என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்த தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவர்கள் இதுகுறித்து பேசி இருக்கிறார். அப்படி பேசுகையில் “லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டு இருக்கும் நிலையில் எப்படி தான் தளபதி விஜய் அவர்களை பார்ப்பது ஏதாவது ஸ்பெஷல் பேட்டி போல திட்டங்கள் வைத்திருக்கிறார்களா?” என கேட்டபோது, “நான் லலித் சாரிடம் இதைப் பற்றி பேசி இருந்தேன்.. கேட்டேன். “இப்போது என்னதான் செய்யப் போகிறீர்கள் எப்படி விஜய் சாரை லைவில் பார்ப்பது?” என கேட்டேன். அப்படி கேட்ட போது, “இப்போதைக்கு விட்டு விடுங்கள் சார் எனக்கு விஜய் சாரிடம் என்ன கேட்பது என்றே இப்போது தெரியவில்லை” என்றார். இப்போது லலித் சார் காத்துக் கொண்டிருக்கிறார் ஒரு சரியான வாய்ப்பு கிடைக்கும்போது பேசுவார். அடுத்த ஓரிரு நாட்களில் அக்டோபர் 1-2 தேதிகளில் அவர் பேசி விடுவார். ஏனென்றால் பீஸ்ட் படம் வந்தபோது அதில் என்டர்டெயின்மென்ட் செய்யும் விதமாக இயக்குனர் நெல்சன் அவர்கள் அவரே பேட்டி எடுத்தது கொஞ்சம் ஜாலியாக இருந்தது. அது மிகவும் சரியாகவும் அமைந்தது இயக்குனர் நெல்சன் சாருக்கு நன்றாக தெரியும், எப்படி என்டர்டைன் செய்து ஜாலியாக கேள்வி கேட்க முடியும் என அவரால். உரிமையோடு கேள்வி கேட்க முடியும் எப்படி கேட்டார் பார்த்தீர்களா! “உங்களைப் பற்றி இப்படி சொல்கிறார்களே?” என தைரியமாக கேட்டார். வேறு யாராவது அப்படி கேட்க முடியுமா? அந்த ஒரு உரிமையோடு அவர் கேட்டதால்தான் அந்த பேட்டி ரொம்ப ஜாலியாக இருந்தது. 

இதுவே லோகேஷ் கனகராஜ் சார் பண்ண முடியாது. அவர் ஒரு சீரியஸான கொஞ்சம் அழுத்தமானவர் இந்த மாதிரி எல்லாம் போய் பேச முடியாது. எனவே லோகேஷ் கனகராஜ் அவர்கள் பேட்டி எடுக்கவில்லை என்றால் யார் அவரை பேட்டி எடுப்பார்கள் என்ற ஒன்று இருக்கிறது. ஒரு விமர்சகர் வைத்து இந்த பேட்டியை எடுக்க முடியாது அப்படி செய்தால் மற்றவர்கள் எல்லாம் குறை சொல்வார்கள். எனவே பொதுவாக ஒரு ஆளை வைத்து தான் எடுக்க முடியும் எந்த சேனலிலும் சார்ந்தவராக இருக்கக் கூடாது. எனவே இப்படி எல்லாம் நிறைய விஷயங்கள் இருக்கிறது இதையெல்லாம் மீறி தான் அவர்கள் இதை செய்ய வேண்டும், வேண்டாம் என்பதை முடிவு செய்ய வேண்டும். ஏற்கனவே இசை வெளியீட்டு விழாவில் நிறைய சங்கடங்களை தவிர்க்கலாம் என்று தான் விட்டுவிடலாம் என்று முடிவு செய்தார்கள். அது மாதிரி இதையும் விட்டு விடுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் நான் என்ன சொன்னேன் என்றால், “சார் கண்டிப்பாக நீங்கள் ஒன்று செய்தாக வேண்டும் அந்த ஒரு நிகழ்வு ஒட்டுமொத்த உலகமும் பேசப்படுவது போல இருக்க வேண்டும். இல்லை என்றால் விஜய் சார் லைவில் பேசுவதற்கு வேறு வாய்ப்பே இல்லாமல் போய்விடும். அவர் என்ன பேச போகிறார் ஒரு வருடமாக அவர் லைவில் பேசவே இல்லை எனவே இப்போது பேச வேண்டும் அல்லவா! என்ன மாதிரியான ஒரு ஸ்பீச் கொடுக்கப் போகிறார் என்று எல்லோரும் எதிர்பார்ப்பார்கள் அல்லவா! எனவே ஒரு நிகழ்வு நடந்தால் நன்றாக இருக்கும் என கேட்டிருக்கிறேன்.

 “இல்ல சார் ஒரு இரண்டு மூன்று நாட்கள் ஆகட்டும் பேசுகிறேன் அதன் பிறகு தான் நமக்கு தெரியும். ஒருவேளை அக்டோபர் 2-3 தேதிகளில் அவர் முடிவெடுத்து விட்டால், பின்னர் என்ன பண்ணலாம் என்று ஒரு திட்டம் இருக்கிறது. கண்டிப்பாக ஏதாவது பண்ணுவார்கள் என நினைக்கிறேன். ஆனால் எல்லாமே தளபதி விஜய் அவர்கள் ஏற்றுக் கொள்வதில் தான் இருக்கிறது. “இல்லை வேண்டாம் இவ்வளவு பெரியதாக திட்டம் போட்டோம் அதுவே நடக்கவில்லை இது வேண்டாம்” என சொல்லிவிட்டாலும் ஒன்னும் செய்ய முடியாது. ஏனென்றால் லலித் சார் அப்படி வற்புறுத்தி கேட்க முடியாது அவர் என்ன சொல்கிறார் என்றால், “அவருக்கு கம்ஃபர்டபிலாக இருந்தால் அப்படி பண்ணலாம் சார்” என சொல்லி இருக்கிறார் பார்க்கலாம்” 

என்று தெரிவித்திருக்கிறார். எனவே ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்த இசை வெளியீட்டு விழா நடைபெறாததால் பீஸ்ட் படத்தில் இசை வெளியீட்டு விழாவிற்கு பதிலாக இயக்குனர் நெல்சன் சிறப்பு பேட்டி எடுத்தது போலவே லியோ படத்திற்கும் தளபதி விஜயின் ஸ்பெஷல் பேட்டி அல்லது வேறு ஏதாவது ஸ்பெஷலான விஷயங்கள் இருக்குமா என்று தற்போது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கான பதில்கள் அடுத்த ஓரிரு தினங்களுக்குள் வெளிவருமா என பொறுத்திருந்து பார்க்கலாம். தளபதி விஜய் லியோ படம் குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவர்களின் முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.