பல கோடி சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அஜித்குமார் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவரும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் அடுத்ததாக முதல் முறை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தயாராகும் AK62 திரைப்படத்தில் அஜித் குமார் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகும் AK62 திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். முன்னதாக மூன்றாவது முறையாக இணைந்து இருக்கும் அஜித்குமார் - H.வினோத் - போனி கபூர் - நீரவ் ஷா கூட்டணியில் தயாராகி இருக்கும் துணிவு திரைப்படம் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிட அடுத்த ஆண்டு(2023) பொங்கல் வெளியீடாக ஜனவரியில் ரிலீஸாகவுள்ளது.

சதுரங்க வேட்டை & தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படங்களின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் மேற்கொண்ட பார்வை & வலிமை திரைப்படங்களை தொடர்ந்து அஜித்குமார் நடித்திருக்கும் துணிவு திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இதனிடையே உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் மேரியோ பல்லோடெல்லி வலிமை திரைப்படத்தின் ஆக்ஷன் காட்சி ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியில் வைத்துள்ளார்.

இத்தாலியின் நட்சத்திர கால்பந்து ஆட்டக்காரரான மேரியோ பல்லோடெல்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித்குமாரின் வலிமை திரைப்படத்தில் இடம்பெற்று இருக்கக்கூடிய அதிரடி ஆக்சன் காட்சி ஒன்றை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்திருப்பது தற்போது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. கால்பந்து வீரர் மேரியோ பல்லோடெல்லியின் அந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

Reach Level Of #Valimai Movie 🔥
Italian footballer Mario Ballotelli's Instagram story.#Thunivu | #ThunivuPongal | #AjithKumar.pic.twitter.com/NnysvEqUbO

— AJITH UK FANS ™ (@AjithUKFans) November 21, 2022