"ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட ஹிப் ஹாப் ஆதி!"- காரணம் என்ன? வைரலாகும் PT Sir பட ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ

PT Sir படப்பிடிப்பில் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட ஹிப் ஹாப் தமிழா ஆதி,Hip hop adhi says sorry to his fans in pt sir movie shoot | Galatta

ரசிகர்களின் ஃபேவரட் சுயாதீன இசைக் கலைஞராக தனது பயணத்தை தொடங்கி, விஜய் ஆண்டனியின் "தப்பெல்லாம் தப்பே இல்லை", சிவகார்த்திகேயனின் "எதிர்நீச்சல் அடி", வணக்கம் சென்னை படத்தின் "சென்னை சிட்டி கேங்ஸ்டா", தளபதி விஜயின் "பக்கம் வந்து" ஆகிய பாடல்களைப் பாடி தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த ஹிப் ஹாப் தமிழா ஆதி தற்போது இன்றைய தலைமுறை ரசிகர்களின் இன்றியமையாத ஃபேவரட் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருகிறார். ஆம்பள திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக களமிறங்கிய ஹிப்ஹாப் தமிழா ஆதி தொடர்ந்து இன்று நேற்று நாளை மற்றும் தனி ஒருவன் ஆகிய படங்களுக்கு சிறப்பாக இசையமைத்து தனி கவனம் ஈர்த்தார்.மேலும் அரண்மனை 2, கதக்களி, கவண், இமைக்கா நொடிகள், வந்தா ராஜாவா தான் வருவேன், Mr.லோக்கல், கோமாளி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ஹிப்ஹாப் தமிழா ஆதி பாடகர் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பின்னர் நடிகராகவும் அவதாரம் எடுத்து மீசையை முறுக்கு மற்றும் நட்பே துணை ஆகிய திரைப்படங்களை இயக்கி நடித்தார். 

இத்திரைப்படங்களை தொடர்ந்து அடுத்தடுத்து நான் சிரித்தால் மற்றும் சிவக்குமாரின் சபதம் என ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடித்த படங்கள் இளம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாகின. கடைசியாக இரட்டை வேடங்களில் ஹிப் ஹாப் ஆதி நடித்த அன்பறிவு திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு நேரடியாக Disney+ Hotstar தளத்தில் ரிலீஸ் ஆனது. இதனிடையே  கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட்டடித்த மின்னல் முரளி திரைப்படம் மாதிரியான சூப்பர் ஹீரோ படமாக மரகத நாணயம் திரைப்படத்தின் இயக்குனர் சரவண் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி கதாநாயகனாக நடித்த வீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதி கட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. 

அடுத்ததாக வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் PT Sir திரைப்படத்தில் தற்போது ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்து வருகிறார். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு திரைப்படத்தின் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி விளையாட்டு ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடிக்கும் PT Sir திரைப்படத்தில் அனிகா சுரேந்திரன் கதாநாயகியாக நடிக்க, இளைய திலகம் பிரபு, தியாகராஜன், பாண்டியராஜன், இளவரசு, முனீஸ் காந்த்,  காஷ்மிரா பரதேசி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் பூஜையோடு தொடங்கப்பட்ட PT Sir திரைப்படத்தில் மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவில், GK.பிரசன்னா படத்தொகுப்பு செய்ய, ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.

PT Sir திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கோயமுத்தூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலைலில் தற்போது தனது TWITTER பக்கத்தில் படப்பிடிப்பு தளத்தில் கூட்டத்திலிருந்து தன்னை சிலர் அழைத்துச் சொல்லும் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ள ஹிப் ஹாப் ஆதி, "உங்கள் அனைவரோடும் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என நினைத்தேன். ஆனால் ஷூட்டிங்கிற்கு பாதிப்பு வரும் என்ற காரணத்தினால் படக்குழுவினர் கேட்டுக் கொண்டதால் செல்ல வேண்டியதாயிற்று. உங்கள் அனைவரையும் ஏமாற்றியதற்கு என்னை மன்னிக்கவும். மற்றொரு நல்ல நேரத்தில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். எப்போதும் உங்கள் அன்பிற்கு கடமைப்பட்டு இருக்கிறேன்" என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். படப்பிடிப்பு தளத்திற்கு குவிந்த ரசிகர்களை காண முடியாமல் வருத்தத்திற்கு ஆளான ஹிப் ஹாப் தமிழா ஆதி அதனை குறிப்பிட்டு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டது பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ஹிப் ஹாப் தமிழா ஆதியின் அந்த வீடியோ இதோ…
 

I really wanted to click a picture with all of you. But since the shoot was getting interrupted the team wanted me out. Sorry to disappoint you all. I’ll be back on a different occasion. Always grateful for your love. I love you all @tnau_coimbatore ❤️❤️❤️ pic.twitter.com/TsUhHYlv1S

— Hiphop Tamizha (@hiphoptamizha) March 2, 2023

உலகநாயகன் கமல்ஹாசன் - இயக்குனர் இமயம் பாரதிராஜா திடீர் சந்திப்பால் உற்சாகத்தில் ரசிகர்கள்... ட்ரெண்டாகும் புகைப்படங்கள் இதோ!
சினிமா

உலகநாயகன் கமல்ஹாசன் - இயக்குனர் இமயம் பாரதிராஜா திடீர் சந்திப்பால் உற்சாகத்தில் ரசிகர்கள்... ட்ரெண்டாகும் புகைப்படங்கள் இதோ!

சினிமா

"சர்ப்ரைஸாக வருகிறதா அஜித் குமாரின் AK62 அப்டேட்?"- லைகா ப்ரொடக்ஷன்ஸ் அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டம்!

தளபதி விஜயின் லியோ பட அதிரடியான LATEST GLIMPSE... லோகேஷ் கனகராஜின் எமோஷ்னலான பதிவு இதோ!
சினிமா

தளபதி விஜயின் லியோ பட அதிரடியான LATEST GLIMPSE... லோகேஷ் கனகராஜின் எமோஷ்னலான பதிவு இதோ!