தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா.தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் நடித்து அசத்தியுள்ளார்.தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து வியாபாரி,படிக்காதவன்,அயன்,பையா,சுறா,சிறுத்தை,வேங்கை,வீரம் என்று கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடிபோட்டு விட்டார் தமன்னா.

தெலுங்கிலும் முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்ட தமன்னா.சில ஹிந்தி படங்களிலும் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து இவர் விகடன் தயாரித்து ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக இருக்கும் வெப் சீரிஸில் தமன்னா ஹீரோயினாக நடித்து வருகிறார்.The November's story என்று இந்த தொடருக்கு படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த தொடர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் பலரும் தங்கள் நேரத்தை சமூகவலைத்தளங்களில் செலவிட்டு வருகின்றனர்.இதற்கு பிரபாலங்களும் விதிவிலக்கு அல்ல.ரசிகர்களுடன் கலந்துரையாடுவது,இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களில் லைவ் ஆக வருவது,ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிப்பது என்று தங்கள் நேரத்தை செலவிட்டு வந்தனர்.

தமன்னா நடனத்திலும்,உடற்பயிற்சியிலும் மிகவும் ஆர்வம் காட்டுபவர்.அவ்வப்போது தனது நடன வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.மேலும் பில்லோ சேலஞ் உள்ளிட்ட சில சேலஞ்களையும் பதிவிட்டு வந்தார்.இவை இணையதளங்களில் வைரலாகி வந்தன.இந்நிலையில் தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோகா செய்யும் புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.இந்த புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்