உலகிலுள்ள பல நாடுகளும்  கொரோனா தொற்றால் திணறி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ்-ன் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மருத்துவமனைகள் முழுவதும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.படுக்கைகள் இல்லாமல் நோயாளிகள் சாலைகளில் காத்திருப்பதும் மருத்துவமனைக்கு வெளியில் படுத்து இருப்பதும் பார்ப்பவர்கள் நெஞ்சை பதற வைக்கிறது.படுக்கை தட்டுப்பாடும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடும்  எப்போது சரியாகும் நாடு எப்போது பழைய நிலைக்கு திரும்பும் என மக்கள் அனைவரும் பிரார்த்தனைகளோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

 இந்நிலையில் இந்தியாவில் பல பிரபலங்களும் கொரோனா தொற்றுக்குள்ளாகி வருவதை நாம் பார்க்க முடிகிறது. அந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருக்கும் நடிகை சுனைனா தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் தமிழ் சினிமாவில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுனைனா. 

தொடர்ந்து மாசிலாமணி,வம்சம், நீர்ப்பறவை, சில்லுக்கருப்பட்டி என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.இந்த நிலையில் நோய் அறிகுறிகள் தென்பட்டால் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் கொரோனா தொற்று உறுதியானதையடுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதனை பதிவிட்டுள்ளார்.அந்தப் பதிவில், தனக்குகொரோனா தொற்று  உறுதியானதாகவும், சுனைனாவும் அவரது குடும்பத்தாரும் மருத்துவ ஆலோசனையின்படி வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படியும் முக கவசம் அணியும் படியும் இந்த ஊரடங்களில்  அவரவர் வீடுகளிலேயே இருந்து அனைவரின் உயிரையும் பாதுகாத்துக் கொள்ளும் படியும்  தெரிவித்துள்ளார் .கொரோனா வைரஸ்-ன் இரண்டாம் அலை வீரியம் மிகவும் அதிகமாக இருப்பதால் எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும் நோய்த்தொற்று ஏற்படுகிறது. எனவே அனைவரும் கவனமாக இருக்கவும்,அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்து கொள்வதாகவும்  பதிவு செய்துள்ளார்.