தெலுங்கு திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஸ்ரீதிவ்யா,  பஸ்ஸ்டாப் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட்டான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் தமிழிலும் கதாநாயகியாக அறிமுகமானார் ஸ்ரீதிவ்யா.

இதையடுத்து நடிகர் விஷ்ணு விஷாலின் ஜீவா, நடிகர் சிவகார்த்திகேயனின் காக்கி சட்டை, நடிகர் அதர்வாவின் ஈட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து ஒரு சினிமாவின் இளம் கதாநாயகியாக பிரபலமடைந்தார். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான பெங்களூர் டேஸ் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான பெங்களூர் நாட்கள் திரைப்படத்திலும் ஸ்ரீதிவ்யா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக சங்கிலி புங்கிலி கதவ தொற திரைப்படத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாக நடிக்க, நடிகை ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் நடிகர்கள் ராதாரவி, சூரி, தம்பி ராமையா மற்றும் நடிகை ராதிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். நகைச்சுவை கலந்த திகில் திரைப்படமாக வெளிவந்த சங்கிலி புங்கிலி கதவ தொற ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் அத்திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை ஸ்ரீதிவ்யா செய்த சேட்டையான ஒரு வீடியோ தற்போது வெளியானது. நடிகை ஸ்ரீதிவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை தற்போது பதிவிட்டுள்ளார். சங்கிலி புங்கிலி கதவ தொற படப்பிடிப்பின் போது திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்களுக்கு மேக்கப் செய்யும் அந்த சேட்டையான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sri Divya (@sd_sridivya)