ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் ஒரு சில காட்சிகளுக்கு தோன்றும் கதாபாத்திரங்களில் நடித்த விஜய் சேதுபதி இன்று படிப்படியாக உயர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதியாக மக்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார்.

படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்கள் , பலவிதமான கெட்டப்கள், புது புது கதைகளங்கள் என தேர்ந்தெடுக்கும் நடிக்கும் விஜய் சேதுபதியின் திரைப்பயணத்தில் மைல்கல்லாக அமைந்த திரைப்படம் 96. இயக்குனர் C.பிரேம்குமார் இயக்கிய 96 திரைப்படத்தில் ராம் கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் ஜானு கதாபாத்திரத்தில் நடிகை திரிஷாவும் வாழ்ந்திருந்தனர்.

ரசிகர்கள் அனைவரின் நினைவுக்குள் புகுந்து மாயம் செய்யும் காதல் திரைப்படமாக வெளிவந்த 96 திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். சிறந்த படம், பாடல், நடிகர், நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர்கள் என அனைவருக்கும் பிலிம்ஃபேர் ,SIIMA மற்றும் நார்வே சர்வதேச விருதுகள் உட்பட பல விருதுகளை 96 பெற்று தந்தது.

இந்நிலையில் 96 திரைப்படத்தின் இயக்குனர் C.பிரேம்குமார் தற்போது புதிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 96 படப்பிடிப்பு சமயத்தில் விமான நிலையத்தில் நடிகர் விஜய்சேதுபதி செய்யும் ரகளையான இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.


 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by C. Premkumar (@prem_storytelling)