உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் நர்ஸ் கதாபாத்திரத்தில் துணை நடிகையாக அறிமுகமான நடிகை காஜல் பசுபதி, தொடர்ந்து டிஷ்யூம், கள்வனின் காதலி, சுப்பிரமணியபுரம், கோ, மௌனகுரு உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா மற்றும் ஜெய் கதாநாயகர்களாக நடித்து கலகலப்பான நகைச்சுவை திரைப்படமாக வெளிவந்த  கலகலப்பு-2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை காஜல் பசுபதி.  மேலும் சின்னத்திரையிலும் பல மெகா தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

காஜல் பசுபதி விஜய் தொலைக்காட்சியின் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1-ல் போட்டியாளராக கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திடீரென தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார் காஜல் பசுபதி.

அந்தப் பதிவில், திடீரென திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.... அடுத்தவாரம் திருமணம்..... கொரோனா காரணமாக யாரையும் அழைக்க முடியல..... தப்பா எடுத்துக்காதீங்க.... என தெரிவித்துள்ளார். நடிகை காஜல் பசுபதி முன்னதாக பிரபல நடன இயக்குனரும் பிக்பாஸ் போட்டியாளருமான சாண்டி மாஸ்டரை திருமணம் செய்து பின்னர் விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது.