கடந்த 2009-ம் ஆண்டு இயக்குனர் பண்ணீர்செல்வம் இயக்கத்தில் வெளியான ரேணிகுண்டா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சஞ்சனா. அதனைத்தொடர்ந்து கோ, அஞ்சான், தனி ஒருவன், அசுரவதம் போன்ற படங்களில் நடித்துள்ளார். பல பெரிய படங்களில் கௌரவ தோற்றத்திலோ, அல்லது பாடல் காட்சிகளில் கேமியோ என்ட்ரி தரும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமுண்டு.

கொரோனா காரணமாக படப்பிடிப்பு இல்லை என்பதால் நடிகர், நடிகைகள் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோக்களையும் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறனர். அப்படி பதிவிடும் நடிகைகளில் சஞ்சனா சிங்கும் ஒருவர். லாக்டவுனில் தண்ணீர் கேன் கொண்டு இவர் செய்த உடற்பயிற்சி வீடியோ இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

தற்போது சஞ்சனா சிங் வெளியிட்ட மேலும் ஒரு வீடியோ, ரசிகர்களை ஆச்சரியத்தின் உச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. உயரமானத் தென்னை மரத்தில் அவர் கேஷூவலாக ஜிவ்வென்று வேகமாக ஏறினால், ஆச்சரியமாக இருக்காதா என்ன? கிராமத்தில் அமைந்துள்ள தோப்புக்குச் சென்ற சஞ்சனா, அங்கு தனது துப்பட்டவைக் கயிறாக்கி, அதை காலில் கட்டிக்கொண்டு அங்கிருக்கும் உயரமான தென்னை மரத்தில் சரசரவென்று ஏறினார். 

மரத்தின் உச்சி வரை சென்ற அவர், அங்கிருந்து மூச்சிறைக்க சர்ரென்று இறங்கினார். இதை அவருடன் சென்றவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சக்கை போடு போட்டு வருகிறது. அவர் கூறும்போது, 20 வருடத்துக்கு முன் தென்னை மரம் ஏறினேன். அதற்குப் பிறகு இப்போதுதான் ஏறி இருக்கிறேன். எனக்கு சிறு வயது ஞாபகம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

பெண்கள் இப்படி தான் இருக்கவேண்டும் என்று அவரது துணிச்சலையும் தைரியத்தையும் பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். துணிச்சலான செயல் செய்து அசத்திய சஞ்சனா, மேலும் பல உயரம் செல்ல வாழ்த்துகிறது நம் கலாட்டா. 2018-ம் ஆண்டுக்கு மேல் பெரிதளவில் தமிழ் சினிமாவில் தலை காட்டாத சஞ்சனா தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று பதிவு செய்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.