இயக்குனர் பா.ரஞ்சித்தின் முதல் திரைப்படமான அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. முன்னதாக கன்னடத்தில் வெளியான நந்தா லவ்ஸ் நந்திதா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நந்திதா ஸ்வேதா, தொடர்ந்து தமிழ் ,தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தில் குமுதா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  தொடர்ந்து முண்டாசுப்பட்டி, புலி, கலகலப்பு 2  உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த  நந்திதா ஸ்வேதா, கடைசியாக இந்த ஆண்டு வெளியான ஈஸ்வரன், கபடதாரி, நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நந்திதா ஸ்வேதாவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்த நடிகை நந்திதா ஸ்வேதா ஆபாசமாக கேள்வி எழுப்பிய ஒரு நபருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். 

இன்ஸ்டாகிராமில் ஒரு மர்ம நபர், நடிகை நந்திதா ஸ்வேதாவின் மார்பகத்தின் அளவு என்ன என கேட்டுள்ளார். அதற்கு

ஏன் இந்தக் கேள்வியை உன்னுடைய அம்மா, தங்கை, தோழி, நண்பனின் தங்கை…. ஏன் உனக்கு நெருங்கிய இன்னும் பலரிடம் கேட்கலாமே அவர்கள் அதற்கு சரியான பதிலை கொடுப்பார்கள்

என தக்க பதிலடி கொடுத்துள்ளார். நந்திதா ஸ்வேதாவின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

actress nandita swetha bold reply to abusive stranger on instagram