தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு தமிழில் விக்ரம் ஜோதிகா நடிப்பில் வெளியான அருள் திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை  நடிகையாக  அறிமுகமானவர் நடிகை ஆர்த்தி. ஆறு மாத குழந்தையாக  இருக்கும் போதிலிருந்தே தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த ஆர்த்தி தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக சில தமிழ் படங்களில் நடித்திருந்தார். 

அருள் திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆர்த்தி அதனை தொடர்ந்து கிரி, மாயாவி, மலைக்கோட்டை, அரண்மனை என தமிழ் சினிமாவில் பல வெற்றித் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 

தொடர்ந்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வந்த ஆர்த்தி VIJAY தொலைக்காட்சியின் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின்  சீசன் 1-ல் கலந்து கொண்டார். தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியின் சில காமெடி நிகழ்ச்சிகளில்  பணியாற்றினார் நடிகை ஆர்த்தி. 

இந்நிலையில் தற்போது நடிகை ஆர்த்தி ஃபேஸ்புக்  ஹேக்கர்களால் HACK செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. முன்னதாக இதுபோல பல சினிமா பிரபலங்களின் பேஸ்புக் டுவிட்டர் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. தற்போது நடிகை ஆர்த்தியின் பேஸ்புக் கணக்கு ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தை நடிகை ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.