பிகினியில் பட்டையை கிளப்பும் 90ஸின் பேவரைட் நாயகி ! வைரல் படங்கள்
By Aravind Selvam | Galatta | December 02, 2021 16:37 PM IST
90'ஸ் கிட்ஸின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர் பூமிகா.தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான இவர் தெலுங்கு குஷி படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவராக மாறினார்.விஜய் நடித்த பத்ரி படத்தின் மூலம் தமிழிலும் ஹீரோயினாக அறிமுகமானார் பூமிகா.இதனை அடுத்து ரோஜாக்கூட்டம் படத்தின் ஹீரோயினாக நடித்து தமிழிலும் பிரபலமான நடிகையாக மாறினார்.
அடுத்ததாக ஹிந்தி,கன்னடம்,போஜ்புரி,பஞ்சாபி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து அசத்தியுள்ளார் பூமிகா.பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து அசத்தியுள்ளார் பூமிகா.இதனை தொடர்ந்து ஒரு வெப் சீரிஸிலும் நடித்து அசத்தியிருந்தார்.
2007-ல் தனது நீண்டநாள் காதலனும்,யோகா டீச்சருமான பரத் தாகூரை திருமணம் செய்துகொண்டார்.இந்த தம்பதியினருக்கு 2014-ல் ஒரு மகன் பிறந்தான்.திருமணத்துக்கு பிறகு முக்கிய வேடங்களில் நடித்து அசத்தி வந்தார் பூமிகா.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் பூமிகா,தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.தற்போது தனது நீச்சல்குள புகைப்படங்கள் சிலவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பூமிகா.இது ரசிகர்கள் மத்தியில் செம ட்ரெண்ட் அடித்து வருகிறது,இந்த புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்