பிரபல மாடலாக இருந்து மலையாளத்தில் Ponnambili என்ற தொடரின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானவர் ராகுல் ரவி.துல்கர் சல்மான் நடித்த Jomonte Suvisheshangal உள்ளிட்ட சில திரைப்படங்களில் சிறப்பு தோட்டங்களிலும் நடித்து அசதியுள்ளார் ராகுல்.

சன் டிவியில் ஒளிபரப்பான செம ஹிட் தொடர்களில் ஒன்று நந்தினி.ராகுல் ரவி இந்த தொடரின் ஹீரோவாக நடித்திருந்தார்.ராகுல் இந்த தொடரில் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விட்டார்.இந்த தொடர் நிறைவடைந்த பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சாக்லேட் தொடரின் நாயகனாக நடித்து வந்தார்.சில காரணங்களால் இந்த தொடர் நிறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார்.நிமேஷிகா ராதாகிருஷ்ணன் இந்த தொடரின் நாயகியாக நடித்து அசத்தி வருகிறார்.பிரித்விராஜ்,நித்யதாஸ்,அக்ஷிதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த தொடரில் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

250 எபிசோடுகளை கடந்து இந்த தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.தற்போது இந்த தொடரில் புது என்ட்ரியாக பிரபல சீரியல் நடிகை கீதா ரவிசங்கர் இணைந்துள்ளார்.இவரது எபிசோடுகள் தற்போது ஒளிபரப்பை தொடங்கியுள்ளன.