நாடோடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபிநயா. மிக அழகான முகம் தோற்றம் உடைய அபிநயா அவர்களுக்கு இயற்கையிலேயே சரியாக வாய் பேசாத, அவர்களுக்கு கேட்கும் திறன் குறைபாடு உடையவர். இருந்தாலும் இவருடைய தன்னம்பிக்கையாலும், விடா முயற்சியினாலும் சினிமா உலகில் தன் நடிப்பின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். 

அதுமட்டும் இல்லாமல் மக்களிடையே பிரபலமாக பேசப்பட்டார். மேலும், இவரால் சரியாக வாய் பேச முடியாது என்பதே நாடோடிகள் படம் வெளியான பின்னர் தான் பலருக்கும் தெரிந்தது. அந்த அளவிற்கு சற்றும் தன்மை இல்லாமல் நாடோடிகள் படத்தில் நடித்திருந்தார் அபிநயா. அதற்கு பிறகு தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்து வந்தார். 

அபிநயா சம்போ சிவ சம்போ என்ற படத்திலும் நடித்து உள்ளார். இதனைத்தொடர்ந்து ஹுத்துகாரு திரைப்படத்திலும் இவரே நடித்தார். இறுதியாக 2017 ஆம் ஆண்டு வெளியான இறுதியாக படத்திற்கு பின் இவரை எந்த படத்திலும் காண முடியவில்லை. இவர் காது கேளாதோர் மற்றும் வாய்பேச முடியாத குழந்தைகளுக்கு சைகை மொழியை கற்றுத் தரும் அவசியத்தை குறித்து பல்வேறு பள்ளிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது பெரிதளவில் பாராட்டு பெற்றது. 

இந்நிலையில் தனது தோழியின் மறைவு குறித்து முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் அபிநயா. தனது நெருங்கிய தோழியின் மறைவை தாங்க முடியாத அபிநயாவுக்கு ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். 

அவரது பதிவில், எனது தோழிக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. முறையான சிகிச்சையுடன் நன்றாக உடல் தேறி வந்தாள். திடீரென அவளது கழுத்திலும் கேன்சர் வந்தது. இந்த முறை அவளது உயிர் பிரிந்தது. 11 வருட நட்பு எங்களது...அவளை மறக்க முடியவில்லை என்று சோகமான பதிவை செய்துள்ளார் அபிநயா. 

actress abhinaya mourns the death of her friend who died due to breast cancer