ரிலீஸுக்கு தயாராகும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’.. - மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் விஷ்ணு விஷால்.. விவரம் உள்ளே..

லால் சலாம் படப்பிடிப்பை நிறைவு செய்த விஷ்ணு விஷால் வைரல் பதிவு உள்ளே - Vishnu Vishal wraps up his portions in Lal salaam | Galatta

தென்னிந்தியாவின் குறிப்பிடத்தக்க முக்கிய நடிகர்களில் ஒருவர் நடிகர் விஷ்ணு விஷால். தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்ந்தேடுத்து நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வரும் இவர் தற்போது பல முக்கியமான திரைபடங்களில் நடித்து வருகிறார். அதன்படி மோகன் தாஸ், ஆர்யன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இடையே தனுஷ் இயக்கி தன் நடிப்பில் 50வது திரைப்படமாக உருவாகவுள்ள ‘D50’ படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது ஆனால் விஷ்ணு விஷால் தரப்பில் அது நிராகரிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் ராட்சசன் 2  படத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கிரிக்கெட் விளையாட்டினை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களாக நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஹீரோவாக நடித்துள்ளனர். மேலும் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘மொய்தீன் பாய்’ என்ற சிறப்பு கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். இவருடன் இணைந்து முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கபில் தேவ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

லைகா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய பிரவின் பாஸ்கர் படத்தொகுப்பு செய்து வருகிறார். மேலும் படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்ட லால் சலாம் படத்தின் படபிடிப்பு சென்னை, மும்பை போன்ற பல பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் படத்தின் நாயகனாக நடித்து வரும் விஷ்ணு விஷால் லால் சலாம் படத்தில் தனக்கான காட்சிகளை நிறைவு செய்துள்ளார். இதனை தன் மனைவியுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். புகைப்படத்துடன் “அருமையான பயணம் இந்த லால் சலாம். உணர்வு பூர்வமாகவும் இருந்தது. நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது. மறக்கமுடியாத நினைவுகளை வழங்கிய என் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி..“ என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக விஷ்ணு விஷால் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் திரைப்படத்தில் இதற்கு முன்னதாக படத்தில் கௌர வேடத்தில் ரஜினிகாந்த் அவரது காட்சிகளை நிறைவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

And its a wrap for me for #LalSalaam
What a journey this has been…
Emotional and overwhelmed..
Learnt so much..
Thanks to my director @ash_rajinikanth and @LycaProductions for this memorable journey❤️❤️ pic.twitter.com/lARO6zKe0w

— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) August 5, 2023

 

“இந்த நேரத்துல தவறான செய்திகளை பரப்பாதீர்கள்..” வதந்திக்கு விளக்கம் அளித்த நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா.. – வீடியோ உள்ளே...
சினிமா

“இந்த நேரத்துல தவறான செய்திகளை பரப்பாதீர்கள்..” வதந்திக்கு விளக்கம் அளித்த நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா.. – வீடியோ உள்ளே...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட ‘காவாலா’ பாடல் செய்த சம்பவம்.. - மாஸ் காட்டிய ரசிகர்கள்.!
சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட ‘காவாலா’ பாடல் செய்த சம்பவம்.. - மாஸ் காட்டிய ரசிகர்கள்.!

மௌனகுரு, மகாமுனியை தொடர்ந்து இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு.. - அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவான படத்தின் முதல் பார்வை இதோ..
சினிமா

மௌனகுரு, மகாமுனியை தொடர்ந்து இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு.. - அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவான படத்தின் முதல் பார்வை இதோ..