சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட ‘காவாலா’ பாடல் செய்த சம்பவம்.. - மாஸ் காட்டிய ரசிகர்கள்.!

100 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற ஜெயிலர் காவாலா பாடல் - Jailer First single kaavaalaa reached 100 million views in youtube | Galatta

வரும் ஆகஸ்ட் 10ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் அதிரடியான ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன், மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவா ராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷராப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் நடிகர்கள் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, மிர்னா, விநாயகன், ரெடின் கிங்க்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய  ராக்ஸ்டார் அனிருத் படத்திற்கு இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.

உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை கொண்ட ஜெயிலர் திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் ,இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இதற்கான மிகப்பெரிய ஏற்பாடு செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

இந்நிலையில் கொண்டாட்டங்களுக்கிடையே ஜெயிலர் படத்தில் இடம் பெற்ற காவாலா பாடல் இணையத்தில் மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது. அனிருத் இசையில் இயக்குனரும் பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜ் எழுதி ஷில்பா ராவ் பாடிய  காவலா பாடல் தற்போது இணையத்தில் 100 மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து உள்ளது. மேலும் ஒரு மில்லியனுக்கு மேல் இப்பாடலை லைக் செய்துள்ளனர். குறுகிய காலத்தில் நூறு மில்லியன் கடந்த பாடல் பட்டியிலில் தற்போது காவலா பாடலும் இடம் பெற்றுள்ளது. இது குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பினை ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

கடந்த ஜூலை மாதம் வெளியான இப்பாடல் தொடர்ந்து ரசிகர்களை துள்ளல் போட வைத்து இணையத்தில் பல லட்ச ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்களிடையே சென்றடைந்து பல நாட்களாக டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. ரீல்ஸ்களாகவும் வைரலாகி வருகிறது. மேலும் காவாலா பாடல் ஸ்பாட்டிபை தளத்தில் 17 மில்லியம் முறையும் கூகுள் மியூசிக் தளத்தில் 10 மில்லியன் முறையும் ரசிகர்களால் கேட்கப்பட்டுள்ளது. தற்போது ரசிகர்களால் #kaavalaa100M என்ற ஹெஷ்டேக்குடன் இப்பாடல் மீண்டும் இணையத்தில் வைரலாகிவருகிறது.

அனிருத் இசையில் கடந்த சில ஆண்டுகளாக வெளியான பல பாடல்கள் இணையத்தில் மிகபெரிய ஹிட் அடித்துள்ளது. கடந்த ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற ‘அரபிக் குத்து’ பாடல் மற்றும் தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் இடம் பெற்ற தேன்மொழி. தாய்Bottom of Form கிழவி போன்ற பாடல்கள் இன்றும் பட்டி தொட்டி எங்கும் ஒலித்திருக்க தற்போது அந்த பட்டியிலில் சிறப்பு இடத்தை பிடித்துள்ளது காவாலா பாடல் என்பது குறிப்பிடதக்கது.

“நீலாம்பரி முன்னாடி என் மானமே போச்சு..” ரஜினிகாந்துடன் நிகழ்ந்த கலகலப்பான தருணம் குறித்து நடிகை மிர்னா.. – Exclusive Interview உள்ளே..
சினிமா

“நீலாம்பரி முன்னாடி என் மானமே போச்சு..” ரஜினிகாந்துடன் நிகழ்ந்த கலகலப்பான தருணம் குறித்து நடிகை மிர்னா.. – Exclusive Interview உள்ளே..

“இதனால் தான் அஜித் சார் படத்துல நடிக்க முடியாம போயிடுச்சு” ஜெயிலர் பட நடிகை மிர்னா பகிர்ந்த தகவல்.. – Exclusive Interview உள்ளே..
சினிமா

“இதனால் தான் அஜித் சார் படத்துல நடிக்க முடியாம போயிடுச்சு” ஜெயிலர் பட நடிகை மிர்னா பகிர்ந்த தகவல்.. – Exclusive Interview உள்ளே..

‘டிடி ரிட்டன்ஸ்’ மாபெரும் வெற்றியை தொடர்ந்து சந்தானத்தின் அடுத்த படத்தின் ரிலீஸை அறிவித்த படக்குழு.. உற்சாகத்தில் ரசிகர்கள்..
சினிமா

‘டிடி ரிட்டன்ஸ்’ மாபெரும் வெற்றியை தொடர்ந்து சந்தானத்தின் அடுத்த படத்தின் ரிலீஸை அறிவித்த படக்குழு.. உற்சாகத்தில் ரசிகர்கள்..