“மயோசிடிஸ் நோய் சிகிச்சைக்கு ரூ.25 கோடி கடன் வாங்கினேனா?..” வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை சமந்தா.. – வைரலாகும் பதிவு உள்ளே..

கடன் வாங்கியதாக வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை சமந்தா Samantha dismisses rumour of  financial help | Galatta

தென்னிந்திய திரையுலகில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக பல ஆண்டுகளாக வலம் வருபவர் நடிகை சமந்தா.  ஆரம்ப காலக் கட்டத்திலே அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி திரையுலகினரின் கவனத்தை ஈர்த்த நடிகை சமந்தா அதன்படி பல பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு தமிழில் வெளியான ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, தெலுங்கு ‘யசோதா’ ஆகிய திரைப்படங்கள் திரையுலகில் வெற்றி படமாக அமைந்தது. அதை தொடர்ந்து இந்த ஆண்டு சமந்தா நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக வெளியான ‘சாகுந்தலம்’ திரைப்படம் படுதோல்வியை அடைந்தது. தற்போது நடிகை சமந்தா விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் உருவாகி வரும் ‘குஷி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். மற்றும் இந்தியில் பேமிலி மேன் சீரிஸ் புகழ் இயக்குனர் ராஜ் & டிகே இயக்கத்தில் உருவாகி வரும் ‘சிட்டாடேல்’ என்ற ஆக்ஷன் தொடரிலும் சமந்தா நடித்து முடித்துள்ளார். இப்படங்களை தொடர்ந்து சமந்தா எந்த படத்திலும் ஒப்பந்தாமாகவில்லை. தற்போது தனக்கு வந்திருக்கும் அறிய வகை நோயான மயோசிடிஸ் நோய்க்கான சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதற்காக திரைத்துறையில் ஒரு வருடம் தற்காலிகமாக சமந்தா ஒய்வு எடுக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. அதன்படியே சமந்தா இதுவரை எந்த ஒரு புதிய படங்களிலும் ஒப்பந்தமாகவில்லை. ஏற்கனவே வாங்கிய முன்பணத்தையும் திருப்பி தந்ததாகவும் சொல்லப் படுகிறது. தற்போது தனது தோழிகளுடன் சுற்றுலா சென்று அந்த நினைவுகளை புகைப்படங்களாக தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் இணையத்தில் நடிகை சமந்தா மயோசிடிஸ் நோய் சிகிச்சைக்கான பிரபல தெலுங்கு நடிகரிடம் இருந்து ரூ 25 கோடி ரூபாய் கடனாக பெற்றிருப்பதாக தகவல் தீயாய் பரவியது. தற்போது இந்த தகவல் குறித்து நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் பகிர்ந்த பதிவில் “ மையோசிடிஸ் சிகிச்சைக்கு ரூ 25 கோடியா? அதில் ஒரு சிறிய தொகையை நான் எனக்காக செலவு செய்ததில் மகிச்சியே. என் சிகிச்சைக்காக நான் மற்றவர்களிடம் இருந்து பணம் பெறவில்லை.. என்னுடைய துறையில் நான் என் வேலைகள் மூலமாக அதிக அளவில் சம்பாதித்துள்ளேன். அதனால் என்னால் என்னை பார்த்துக் கொள்ள முடியும். நன்றி மையோசிடிஸ் நோயினால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கபட்டுள்ளனர். அதனால் சிகிச்சை தொடர்பாக செய்திகள் வெளியிடும்போது பொறுப்புடன் இருங்கள்.. “ என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து பரவி வந்த வதந்திகளுக்கு சமந்தா அளித்த விளக்கம் தற்போது இணையத்தில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

the kerala story female lead adah sharma hospitalised due to hives

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட ‘காவாலா’ பாடல் செய்த சம்பவம்.. - மாஸ் காட்டிய ரசிகர்கள்.!
சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட ‘காவாலா’ பாடல் செய்த சம்பவம்.. - மாஸ் காட்டிய ரசிகர்கள்.!

மௌனகுரு, மகாமுனியை தொடர்ந்து இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு.. - அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவான படத்தின் முதல் பார்வை இதோ..
சினிமா

மௌனகுரு, மகாமுனியை தொடர்ந்து இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு.. - அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவான படத்தின் முதல் பார்வை இதோ..

“முழுசா சந்திரமுகியா மாறுன கங்கனாவை பார்..” அசத்தலான முதல் பார்வையை வெளியிட்ட படக்குழு.. ரசிகர்களால் வைரலாகும் Glimpse இதோ..
சினிமா

“முழுசா சந்திரமுகியா மாறுன கங்கனாவை பார்..” அசத்தலான முதல் பார்வையை வெளியிட்ட படக்குழு.. ரசிகர்களால் வைரலாகும் Glimpse இதோ..