“தையல் போட இடமே இல்ல..” விடுதலை படத்தில் சண்டை காட்சிகளில் நடித்தது குறித்து சூரி பகிர்ந்து கொண்ட தகவல் – சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..

விடுதலை சண்டை காட்சிகள் குறித்து சூரி பகிர்ந்து கொண்ட தகவல் -  Actor Soori about Stunt Sequence in Vetri maaran viduthalai movie | Galatta

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் திரைப்படம் விடுதலை. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை தழுவி இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட விடுதலை திரைப்படத்தில் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். இசைஞானி இளையராஜா இசையில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் 31 ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்நிலையில் படம் குறித்துபல சுவாரஸ்யமான தகவல்களை நடிகர் சூரி நமது கலாட்டா தமிழ் மீடியாவில் பகிர்ந்து கொண்டார். இதில் ஆபத்தான சண்டை காட்சிகளில் நடித்தது குறித்து கேட்கையில் நடிகர் சூரி,  

ஒரு நகைச்சுவை நடிகனா இருந்து கதாநாயகனா மாறும்போது நிறைய கஷ்டபட்டிருக்கேன் அத தைரியமா சொல்லலாம். பழக்கப்பட்ட ஹீரோக்களே சில நேரம் படபிடிப்பில் அடிபடுவது வழக்கம். எனக்கு இதெல்லாம் பழக்கமில்ல. இந்த படத்தில் பெரிய காட்சி ஒன்று இருக்கிறது. அந்த காட்சியில் நான் முக்கிய பங்கு இருக்கறதால அதுல சண்டை சார்ந்து இயங்க வேண்டும் னு இயக்குனர் சொன்னதால நான்கு நாட்களுக்கு முன்பு தான் அந்த காட்சிக்கான பயிற்சியை எடுத்தேன். அந்த காட்சி மட்டும் 15 நாள் எடுத்தாங்க.. பயிற்சி எடுத்தப்போதே எனக்கு தோள்பட்டையில் சவ்வு கிழிஞ்சிடுச்சு..  அதுக்கப்புறம் 15 நாள் ரொம்ப கஷ்டப்பட்டேன். இருந்தாலும் முடியாது னு சொல்லல.. தோள் பட்டை இறங்கிடுச்சு.. கைகள் 4 தையல். காலில் 5 தையல் ..  இயக்குனர் வெற்றிமாறன் கூட நிறுத்திடலாம் னு யோசிச்சார். நான் வேண்டாம் பன்றேன்னு சொன்னேன். விழுந்து 6 தையல் போட்டுட்டு உடனே படபிடிப்பிற்கு போய்விட்டேன்.  திரும்பவும் 35 அடியில் இருந்து குதிச்சு தையல் பிரிஞ்சிடுச்சு டாக்டர் பார்க்க போனேன். அவர் 5 நிமிஷம் வருத்தப்பட்டார். அடிப்பட்ட இடத்துல  கொஞ்சம் இருந்த இடத்துல தையல் போட்டார்.  திரும்பவும் படபிடிப்புல பிரிஞ்சுடுச்சு..

அதுக்கப்புறம் மருத்துவர்கிட்ட போகவே இல்ல.. உதவியாளர் உதவியால சரி செஞ்சிட்டேன்..இவ்வளவு பெரிய படபிடிப்பு தளம் லட்சக்கணக்கான ஒரு நாள் செலவு நடக்குது. அப்போ முடியல னு போய் படுக்க முடியாது. படுத்தா அவ்ளவும் நஷ்டம். வெற்றிமாறன் சார் எதுவும் சொல்ல மாட்டார். தயாரிப்பாளர நினைச்சு பாருங்க..காமெடியன வெச்சு இத்தனை கோடி செலவு செய்றப்ப இது போல நம்ம படுக்கலாமா னு எண்ணி மன உறுதி வெச்சு படபிடிப்புல இறங்குனோம்.” என்றார்.

மேலும் விடுதலை படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை நடிகர் சூரி பகிர்ந்து கொண்ட சிறப்பு வீடியோ இதோ.

 

மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கும் பிரேமம் இயக்குனர் .. உற்சாகத்தில் ரசிகர்கள் - அட்டகாசமான அப்டேட் இதோ..
சினிமா

மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கும் பிரேமம் இயக்குனர் .. உற்சாகத்தில் ரசிகர்கள் - அட்டகாசமான அப்டேட் இதோ..

வெற்றி மாறன் நடிகர் சூரிக்கு சொன்ன மூன்று கதைகள்..  வைரலாகும் சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..
சினிமா

வெற்றி மாறன் நடிகர் சூரிக்கு சொன்ன மூன்று கதைகள்.. வைரலாகும் சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..

சென்னைக்கு பறந்த லோகேஷ் கனகராஜின் ‘லியோ’ படக்குழுவினர் –  வைரலாகும் புகைப்படங்கள்  இதோ..
சினிமா

சென்னைக்கு பறந்த லோகேஷ் கனகராஜின் ‘லியோ’ படக்குழுவினர் – வைரலாகும் புகைப்படங்கள் இதோ..