வெற்றி மாறனுக்கு நன்றி தெரிவித்த விஜய் சேதுபதி.. - ‘விடுதலை’ படப்பிடிப்பு குறித்து நடிகர் சூரி.. சிறப்பு நேர்காணல் இதோ..

விடுதலை படபிடிப்பில் நடந்த சம்பவம் குறித்து நடிகர் சூரி - Actor Soori about Viduthalai shooting spot | Galatta

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் துணைவன் சிறுகதையை தழுவி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘விடுதலை’ இரண்டு பாகங்களாக உருவான இப்படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி முதல் முறையாக கதாநாயகனாகவும் கௌரவ வேடத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இவர்களுடன் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன், சேத்தன் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

RS இன்ஃபோடைன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படத்தின் முதல் பாகம் உலகமெங்கும் மார்ச் 31 ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் கதாநாயகனாக நடித்துள்ள நடிகர் சூரி நமது கலாட்டா தமிழ் மீடியா சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு விடுதலை படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் விஜய் சேதுபதியுடன் நடிப்பது குறித்து சூரி பகிர்ந்து கொண்டவை,

"விஜய் சேதுபதி மாமாவும் நானும் வெண்ணிலா கபடி குழு படத்திலே நல்ல பழக்கம். நானும் அவரும் ஒரே காலக்கட்டத்தில் தான் வாய்ப்பு தேடி கொண்டிருந்தோம். வெண்ணிலா கபடி குழு படத்தில் வலிப்பு வரா மாதிரி காட்சியை அவ்வளோ நேர்த்தியா ஒரே டேக்கிங்கில் டப்பிங் கொடுத்திருப்பார்.என்னய்யா மனுசன் னு தோனுச்சு.. அவர் அப்போதிலிருந்து சொல்வர். 'நீ காமெடி ஆர்டிஸ்ட் னு நினைக்காத என்னை பொறுத்தவரை நீ நடிகன்' னு சொல்வார்.  விடுதலை படபிடிப்பு தளத்தில் சேதுவை பார்த்து எனக்கு அவ்ளோ சந்தோஷம். என்னை காட்டி வெற்றி மாறனிடம் விஜய் சேதுபதி சொன்னது 'இந்த படத்தில் இவனுக்கு வாய்ப்பு கொடுத்ததற்கும் அவன கதாநாயகனாகனும் னு என்னோட ஆசையை நிறைவேற்றியதற்கு ரொம்ப நன்றி சார்.." னு சொன்னார்.” என்றார் நடிகர் சூரி.

மேலும் பல சுவாரஸ்யமான படபிடிப்பு நிகழ்வு குறித்து நடிகர் சூரி பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ...

சென்னைக்கு பறந்த லோகேஷ் கனகராஜின் ‘லியோ’ படக்குழுவினர் –  வைரலாகும் புகைப்படங்கள்  இதோ..
சினிமா

சென்னைக்கு பறந்த லோகேஷ் கனகராஜின் ‘லியோ’ படக்குழுவினர் – வைரலாகும் புகைப்படங்கள் இதோ..

தொடங்கியது காந்தாரா 2.. உற்சாகத்தில் ரசிகர்கள் -  படக்குழு கொடுத்த அட்டகாசமான அப்டேட் இதோ..
சினிமா

தொடங்கியது காந்தாரா 2.. உற்சாகத்தில் ரசிகர்கள் - படக்குழு கொடுத்த அட்டகாசமான அப்டேட் இதோ..

“சாதி பேசுகின்ற படங்கள் எல்லாமே தவறான படங்கள் தான்” வேல ராமமூர்த்தி காரசாரமான பதில்..  – வைரலாகும் சிறப்பு நேர்காணல் இதோ..
சினிமா

“சாதி பேசுகின்ற படங்கள் எல்லாமே தவறான படங்கள் தான்” வேல ராமமூர்த்தி காரசாரமான பதில்.. – வைரலாகும் சிறப்பு நேர்காணல் இதோ..