சென்னைக்கு பறந்த லோகேஷ் கனகராஜின் ‘லியோ’ படக்குழுவினர் – வைரலாகும் புகைப்படங்கள் இதோ..

காஷ்மீரில் படப்பிடிப்பை நிறைவு செய்த லியோ படக்குழுவினர் - Leo Team wraps Kashmir schedule | Galatta

இந்த ஆண்டு துவக்கத்திலே தமிழ் சினிமா பெரிய வெற்றி படங்களுடன் தொடங்கி மார்ச் மாதம் வரை பெரிய படங்களை வரிசையாக வெளியிட்டு வருகிறது. அதன்படி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் அடுத்த பெரிய திரைப்படம் செவன் ஸ்க்ரீன் தயாரிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி தளபதி விஜய் நடித்து ‘லியோ’. வாரிசு பட வெற்றிக்கு பின் தளபதி விஜய்  அடுத்ததாக கையிலெடுத்தது மிரட்டலான அதிரடி ஆக்ஷன் திரைப்படம் அதன்படி லோகேஷ் கனகாராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜயுடன் இணைந்து திரிஷா, ஆக்ஷன் கிங் அர்ஜுன். இயக்குனர் கௌதம் மேனன், இயக்குனர் மிஷ்கின், பிரியா ஆனந்த், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அனிரூத் இசையில் அட்டகாசமாக உருவாகி வரும் இப்படத்திற்கு பீஸ்ட் திரைப்பட ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார்.

கடந்த ஆண்டு சென்னையில் லியோ பட பூஜை நடைபெற்று சென்னையில் சில காலம் படமாக்கப்பட்டது. பின் தனி விமானம் அமைத்து படக்குழுவினர் காஷ்மீருக்கு பறந்தனர். கடந்த சிலமாதமாக காஷ்மீரில் தீவிரமாக படமாக்கப்பட்டு வரும் லியோ திரைப்படம் தனது காஷ்மீர் ஷெட்டியூலை தற்போது நிறைவு செய்துள்ளது. இதனையடுத்து சென்னைக்கு தனி விமானம் மூலம் லியோ படக்குழுவினர் புறப்பட்டுள்ளனர். சில நாட்கள் இடைவெளி விட்டு பின் மீண்டும் சென்னையில் படம் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

rishab shetty kantara second part writing has begun here is the official announcement

தனி விமானம் மூலம் சென்னை திரும்பும் லியோ படக்குழுவினர் இணையத்தில் சிறப்பு விமான பயண சீட்டு மற்றும் நேர பிரிவுகளை புகைப்படங்களாக இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதனையடுத்து அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

rishab shetty kantara second part writing has begun here is the official announcement

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் லியோ திரைப்படத்தின் டைட்டில் டீசர் முன்னகாக வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.லியோ திரைப்படம் இந்திய அளவு பான் இந்திய திரைப்படமாக வரும் ஆயுத பூஜை பண்டிகை வெளியீடாக திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

“பத்து தல படத்தில் நான் இதுதான் Follow பண்ணேன்..” கௌதம் கார்த்திக் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – முழு வீடியோ இதோ..
சினிமா

“பத்து தல படத்தில் நான் இதுதான் Follow பண்ணேன்..” கௌதம் கார்த்திக் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – முழு வீடியோ இதோ..

நீண்ட நாள் கழித்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அனுஷ்கா – வைரலாகும் புது படத்தின் Glimpse இதோ..
சினிமா

நீண்ட நாள் கழித்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அனுஷ்கா – வைரலாகும் புது படத்தின் Glimpse இதோ..

“ஏன் இவங்கள சமூகம் ஏத்துக்கனும்” காட்டமாக விமர்சித்த நடிகை ஷகீலா..  – வைரலாகி வரும் முழு வீடியோ இதோ..
சினிமா

“ஏன் இவங்கள சமூகம் ஏத்துக்கனும்” காட்டமாக விமர்சித்த நடிகை ஷகீலா.. – வைரலாகி வரும் முழு வீடியோ இதோ..