வெற்றி மாறன் நடிகர் சூரிக்கு சொன்ன மூன்று கதைகள்.. வைரலாகும் சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..

விடுதலை திரைப்படத்தில் கூட்டணி அமைத்தது குறித்து நடிகர் சூரியின் சிறப்பு நேர்காணல் இதோ - Soori Shares Viduthalai pre production experience | Galatta

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான பிரபலங்களில் ஒருவர் நடிகர் சூரி. ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக தமிழ் சினிமாவில் நடித்து வந்த சூரி. வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பரோட்டா சூரியாக பிரபலமடைந்தார். அட்டகாசமான உடல் மொழியையும் மண் சார்ந்த நகைச்சுவை வசனங்களும் நடிகர் சூரிக்கு தனித்துவமாக தெரிய வைத்தது. அதன்படி மீன் கொத்தி பறவை, வருத்தபடாத வாலிபர் சங்கம். தேசிங்கு ராஜா, ரஜினி முருகன் போன்ற படங்கள் சூரியை முன்னணி நகைச்சுவை நடிகராக மாற்றியது அதன்படி ஏகப்பட்ட திரைப்படங்களில் தொடர்ந்து நகைச்சுவை நடிகராக அசத்தியிருந்தார்.

விஜய், அஜித், ரஜினி, சூர்யா, சிவகார்த்திகேயன், கார்த்தி, ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் சூரி தனித்து தெரிந்தார். குடும்பங்கள் கொண்டாடும் நகைச்சுவையை வழங்கி உச்சத்திற்கு சென்றார் நடிகர் சூரி.  இடையே அவர் திரைப்படங்களில் வரிசையாய் நடிப்பதில் இடைவெளி விட்டார். அவ்வப்போது சில படங்கள் தான் வெளியானது. உடல் தோற்றத்தை மாற்றி சிக்ஸ் பேக் வைத்து ஆச்சர்யத்திலும் ஆழ்த்தினார் நடிகர் சூரி. இதனிடையே நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க போவதாகவும் அப்படத்தினை இயக்குனர் வெற்றி மாறன் இயக்கவுள்ளார் என்ற செய்தி வெளியானது. அதனை உறுதி படுத்தும் வகையில்

RS இன்ஃபோடைன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் சூரி கதையின் நாயகனாகவும் கௌரவ தோற்றத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்தார். இப்படத்திற்கு விடுதலை என்று பெயரிடப் பட்டது. அதன்படி விறுவிறுப்பாக தொடங்கிய விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. விடுதலை திரைப்படத்தின் முதல் பாக டிரைலர் வெளியாகி  மிக பெரிய எதிர்பார்பை எழுப்பியது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் 31ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் படம் குறித்துபல சுவாரஸ்யமான தகவல்களை நடிகர் சூரி நமது கலாட்டா தமிழ் மீடியாவில் பகிர்ந்து கொண்டார். இதில் எப்படி விடுதலை படத்தில் சூரி இணைந்தார் என்ற கேள்விக்கு,

" காரைக்குடி கதைகளத்தில் ஒரு 5 மனிதர்கள் சம்பந்தப்பட்ட கதை என்னிடம் சொன்னார். கதையில் நான் எதிர்பார்த்த எந்த கதாபாத்திரமும் எனக்கு வெற்றி மாறன் கொடுக்கவே இல்லை.  எல்லாம் சொல்லி முடிச்சுட்டு மெயின் ரோலில் நீங்க பண்ணுங்க னு சொல்லிட்டாரு.. கொஞ்சம் கூட எதிர்பார்க்கல..  நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். வீட்ல வந்த சொன்னப்போ யாருமே நம்பல.. அப்பறம் புரிய வெச்சேன்.

இடையில வெற்றி மாறன் சார் கூப்டுவாருனு எதிர்பார்த்தேன் கூப்பிடவே இல்ல.. ஒன்றரை வருஷம் கழிச்சு கூப்டாரு.. கூப்டு இப்போ இந்த படம் பண்ணல னு சொல்லிட்டாரு.. நான் வருத்தப்பட்டேன்.  அப்பறம் வேறு ஒரு கதையை சொன்னாரு.. துபாய் கதைக்களத்தில் ஒரு கதை சொன்னார்  கதை சூப்பரா இருந்துச்சு. திரும்ப  கூப்டு அசுரன் தனுஷ் சாரோட பண்ண போறேன். அசுரன் படம் முடிச்சுட்டு பண்ணலாம் னு சொல்லிட்டாரு.. அசுரன் ரிலீஸாகி மிகப்பெரிய ஹிட்.  தினம் தினம் ஒரு நியூஸ் அவர் பெரிய பெரிய ஹீரோவோட படம் பன்றாரு னு.. திரும்பவும் வெற்றி மாறன் சாரிடம் அழைப்பு வந்தது. பின் படம் பண்ண தொடங்கலாம் னு உறுதியா சொல்லிட்டாரு. துபாய் க்கு இடம் லாம் பார்க்க அனுப்பிட்டாங்க.‌ போட்டோ ஷூட் கூட பண்ணியாச்சு.

ஒரு மணி நேரத்தில் கொரோனா செய்தி வந்தது. மிகப்பெரிய அளவு வந்தது.  துபாய் ல படம் எடுக்க முடியாது னு சொல்ல வேற ஒரு கதை சொல்ல.. அதுதான் விடுதலை கதை. நிறைய படம் வந்தது எல்லாமே அவரிடம் கேட்டு பண்ணேன். அப்படியாவது விடுதலை படத்தை எப்போ எடுப்பாருனு நிறைச்சாரு.. அண்ணாத்த, டான் படம் லாம் வந்துச்சு அவரிடம் கேட்டேன் பண்ணுங்க னு சொன்னார்.. ஒரு வழியா ரொம்ப நாள் கழிச்சு விடுதலை படம் எடுக்க முடிவு செய்தார்.அப்பறம் கதையை சொல்லி படப்பிடிப்பு தொடங்கியது.” என்றார் நடிகர் சூரி

மேலும் நடிகர் சூரி விடுதலை படம் குறித்து பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான  முழு வீடியோ இதோ..

“சாதி பேசுகின்ற படங்கள் எல்லாமே தவறான படங்கள் தான்” வேல ராமமூர்த்தி காரசாரமான பதில்..  – வைரலாகும் சிறப்பு நேர்காணல் இதோ..
சினிமா

“சாதி பேசுகின்ற படங்கள் எல்லாமே தவறான படங்கள் தான்” வேல ராமமூர்த்தி காரசாரமான பதில்.. – வைரலாகும் சிறப்பு நேர்காணல் இதோ..

“பத்து தல படத்தில் நான் இதுதான் Follow பண்ணேன்..” கௌதம் கார்த்திக் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – முழு வீடியோ இதோ..
சினிமா

“பத்து தல படத்தில் நான் இதுதான் Follow பண்ணேன்..” கௌதம் கார்த்திக் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – முழு வீடியோ இதோ..

நீண்ட நாள் கழித்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அனுஷ்கா – வைரலாகும் புது படத்தின் Glimpse இதோ..
சினிமா

நீண்ட நாள் கழித்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அனுஷ்கா – வைரலாகும் புது படத்தின் Glimpse இதோ..