காதல் கணவரின் இயக்கத்தில் நடித்த பிரபல சீரியல் நடிகை... ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் அசத்தலான குறும்படம் இதோ!

கணவர் இயக்கத்தில் ஷாம்பவி நடித்த பிம்பம் குறும்படம்,Serial actress shambhavy and her husband pimbam shortfilm | Galatta

சின்னத்திரையில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை ஷாம்பவி குருமூர்த்தி ஆரம்ப கட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக சன் டிவியின் பிரபல சீரியல்களில் நடித்தவர். பின்னர் மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பான தாமரை மெகா தொடரில் முக்கிய வேடத்தில் நடித்த ஷாம்பவி குருமூர்த்தி இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் “ரன்னர் அப்” விக்ரமன் கதாநாயகனாக நடிக்க, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விண்ணைத்தாண்டி வருவாயா சீரியலிலும் முக்கிய வேடத்தில் நடித்தார்.

பின்னர் தெலுங்கில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான மல்லேஸ்வரி என்னும் சீரியலில் கதாநாயகியாக நடித்த ஷாம்பவி குருமூர்த்தி தென்னிந்திய சின்னத்திறையில் குறிப்பிடப்படும் நடிகையாக வளர்ந்து தொடர்ச்சியாக தெலுங்கு சீரியல்களில் நடித்தார். இதனிடையே சன் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் தொடராக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட கண்மணி மெகா தொடரில் இரண்டாவது நாயகியாக கலக்கிய நடிகை ஷாம்பவி குருமூர்த்தி தற்போது தெலுங்கில் சாதனா எனும் மெகா தொடரில் நடித்து வருகிறார். சன் டிவியில் கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கயல் மெகா தொடரின் தெலுங்கு வெர்ஷனாக ஒளிபரப்பாகி வரும் இந்த சாதனா சீரியல் தெலுங்கிலும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது காதலர் R.பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட ஷாம்பவி குருமூர்த்தி தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் காலையில் ஒளிபரப்பாகும் வணக்கம் தமிழா எனும் நிகழ்ச்சியை தொகுப்பாளராகவும் தொகுத்து வழங்கி மக்களை மகிழ்வித்துள்ளார். இந்த நிலையில் தனது காதல் கணவர் R.பிரசன்னா அவர்களின் இயக்கத்தில் புதிய குறும்படம் ஒன்றில் நடிகை ஷாம்பவி குருமூர்த்தி நடித்துள்ளார். மூன்றாம் பாலினத்தின் சொல்ல முடியாத மனக்கசப்பை திரை வடிவமாக சிறிய குறும்படத்தில் சொல்லும் வகையில் R.பிரசன்னா இந்த குறும்படத்தை இயக்கியுள்ளார். 

பிம்பம் என பயிரிடப்பட்டுள்ள இந்த குறும்படத்தை நடிகை ஷாம்பவி குருமூர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகை ஷாம்பவி குருமூர்த்தியின் கணவர் R.பிரசன்னா எழுதி இயக்க, DIVINE PICTURES சார்ப்பில் அஜய் மனோகரன் தயாரிக்க, செல்வப் பிரதீப் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு செய்துள்ள இந்த பிம்பம் குறும்படம் தற்போது சமூக வலைதளங்களிலும் யூட்யூப்பிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அந்த பிம்பம் குறும்படம் இதோ…
 

பத்து தல படத்தில் சிலம்பரசன்TRக்கு ஜோடி இல்லாததால் இது மிஸ் ஆயிடுச்சு... KEஞானவேல் ராஜாவின் கலக்கலான பதில் - கலகலப்பான வீடியோ இதோ!
சினிமா

பத்து தல படத்தில் சிலம்பரசன்TRக்கு ஜோடி இல்லாததால் இது மிஸ் ஆயிடுச்சு... KEஞானவேல் ராஜாவின் கலக்கலான பதில் - கலகலப்பான வீடியோ இதோ!

மாயாஜாலங்களை தொடங்கிய ARரஹ்மான்...வேகமெடுக்கும் பொன்னியின் செல்வன் 2 இசைப் பணிகள்! அட்டகாசமான அறிவிப்பு இதோ
சினிமா

மாயாஜாலங்களை தொடங்கிய ARரஹ்மான்...வேகமெடுக்கும் பொன்னியின் செல்வன் 2 இசைப் பணிகள்! அட்டகாசமான அறிவிப்பு இதோ

எல்லா மொழி - எல்லா ஹீரோக்களும் அவருக்கு காத்திருக்கிறார்கள்... லோகேஷ் கனகராஜை புகழ்ந்த KEஞானவேல் ராஜா! வைரல் வீடியோ
சினிமா

எல்லா மொழி - எல்லா ஹீரோக்களும் அவருக்கு காத்திருக்கிறார்கள்... லோகேஷ் கனகராஜை புகழ்ந்த KEஞானவேல் ராஜா! வைரல் வீடியோ