சூப்பர் ஹீரோவாக மாஸ் காட்டும் ஹிப் ஹாப் ஆதி.. வெளியானது ‘வீரன்’ பட டிரைலர் – ரசிகர்களால் வைரலாகும் வீடியோ இதோ..

ஹிப் ஹாப் ஆதியின் வீரன்  பட டிரைலர் வைரலாகும் வீடியோ இதோ - Hip hop adhi veeran trailer out now | Galatta

தமிழ் சினிமாவில் சம கால இளைஞர்களை கவர்ந்து அவர்களின் நம்பிக்கை நட்சதிரமாக இருந்து வரும் நடிகர் ஹிப் ஹாப் ஆதி. இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுகமாகி பாடலாசிரியாராக பாடகராக நடிகராக இயக்குனராக மற்றும் தயாரிப்பாளராக பன்முக திறனுடன் ஹிப் ஹாப் ஆதி தற்போது திரையுலகில் வலம் வருகிறார். இவருடைய முந்தைய திரைப்படங்கள் அன்பறிவு, சிவக்குமாரின் சபதம் சரியாக வரவேற்பு கிடைக்காததால் அவருடைய அடுத்தடுத்த படங்கள் அவருக்கு கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. அதன்படி தற்போது ஹிப் ஹாப் ஆதி ஐசரி கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் தயாராகி வரும் PT Sir திரைப்படத்தில் விளையாட்டு ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கோயமுத்தூர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மரகதநாணயம் பட இயக்குனரின் அடுத்த திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘வீரன்’ திரைப்படத்தில் ஹிப் ஹாப் ஆதி நடித்து முடித்துள்ளார். மலையாள திரையுலகில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த ‘மின்னல் முரளி’ திரைப்படம் போல் வித்யாசமான சூப்பர் ஹீரோ கதைகளத்தில் உருவாகி வரும் வீரன் படத்தில் சூப்பர் ஹீரோவாக ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் வினய், ஆதிரா ராஜ், முனீஸ் காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் தீபக் D மேனன் ஒளிப்பதிவில் பிரசன்னா.GK படத்தொகுப்பு செய்ய, மகேஷ் மேத்யூ ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார். மேலும் இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் உருவான இப்படத்தின் முதல் பார்வை தொடங்கி பாடல் வரை இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வந்த நிலையில் ஹிப் ஹாப் ஆதியின் வீரன் திரைப்படம் வரும் ஜூன் மாதம் 2ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியகவுள்ளது.

இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்பை அதிகம் பெற்றுள்ள வீரன் திரைப்படத்தின் டிரைலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அட்டகாசமான நகைச்சுவை கதைக்களத்தில் ஹிப் ஹாப் ஆதி சூப்பர் ஹீரோவாக கலக்க வினய் வில்லதனத்தில் மிரட்டுகிறார்.  தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது வீரன் டிரைலர். நிச்சயம் மரகத நாணயம் திரைப்படம் போல் இந்த வீரன் திரைப்படம் நகைச்சுவையுடன் பக்கா என்டர்டெயின்மண்ட் படமாக மக்கள் ஏற்று கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.  

வித்யாசமான ஆடையில் ஐஸ்வர்யா ராய்.. ‘காஸ்டியூம் அடிமைகள்’ என்று பதிவிட்ட பிரபல இயக்குனர்.. - வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

வித்யாசமான ஆடையில் ஐஸ்வர்யா ராய்.. ‘காஸ்டியூம் அடிமைகள்’ என்று பதிவிட்ட பிரபல இயக்குனர்.. - வைரலாகும் பதிவு இதோ..

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ரசிகை.. அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா.! – உருக்கமான இரங்கல் செய்தி இதோ.
சினிமா

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ரசிகை.. அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா.! – உருக்கமான இரங்கல் செய்தி இதோ.

நண்பனை திருமணம் செய்யவிருக்கும் கனா காணும் காலங்கள் பிரபலம் தீபிகா.. - குவியும் வாழ்த்துகள்.. வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

நண்பனை திருமணம் செய்யவிருக்கும் கனா காணும் காலங்கள் பிரபலம் தீபிகா.. - குவியும் வாழ்த்துகள்.. வைரலாகும் பதிவு இதோ..