தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவரான நடிகர் நரேன் தனது சிறந்த நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். கடைசியாக தமிழில் நடிகர் கார்த்தி நடித்த கைதி திரைப்படத்தில் காவல்த்துறை அதிகாரியாகவும், இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சேம்பியன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

இதனையடுத்து மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து வரும் விக்ரம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகர் நரேன். அடுத்ததாக நரேன் நடித்துள்ள புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது.

கட்ரிஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் நஜிப் கடிரி தயாரிப்பில் இயக்குனர் சுகீத் இயக்கத்தில் உருவாகும் குரல் படத்தில் நடிகர் நரேன் கதாநாயகனாக நடித்துள்ளார். ராக்கேஷ் சங்கரின் கதை திரைக்கதையில், சந்துரு வசனங்களை எழுத விவேக் மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

தமிழ் & மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள குரல் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர்கள் மங்கல் சுவர்ணன் மற்றும் சஷ்வத் சுனில்குமார் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்நிலையில் தற்போது குரல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. நடிகர் கார்த்தி நரேனின் பிறந்தநாளான இன்று குரல் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டார். வித்தியாசமான குரல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ...