“நடிகர் மன்சூர் அலிகான்” உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி!!!
By Anand S | Galatta | May 10, 2021 18:17 PM IST
தமிழ் சினிமாவின் முன்னணி வில்லன் நடிகர்களில் மிகவும் முக்கியமான ஒரு வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் . கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக நடித்து வரும் மன்சூர் அலிகான். நடிகர் விஜயகாந்த் அவர்கள் நடித்த கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.
தொடர்ந்து பல திரைப்படங்களில் வில்லன் நடிகராக நடித்து வந்த மன்சூரலிகான் சில படங்களில் நகைச்சுவை வேடத்திலும் நடித்துள்ளார். சினிமா மட்டுமல்லாமல் அரசியலிலும் நாட்டமுள்ள மன்சூர் அலிகான் புதிய தமிழகம் கட்சி நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளிலும் இருந்துள்ள சட்டமன்ற உறுப்பினருக்கான தேர்தல்களிலும் போட்டியிட்டு உள்ளார்.
இந்நிலையில் மன்சூர் அலிகான் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட மன்சூர் அலிகானுக்கு தொற்று இல்லை என முடிவுகள் வந்தது.
ஆனால் மன்சூர் அலிகானின் சிறுநீரகத்தில் கல் இருப்பதால் மன்சூர் அலி கான் மிகுந்த அவதிக்குள்ளாகி இருக்கிறார். இதனையடுத்து மன்சூர் அலிகானின் சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை அகற்றுவதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் மன்சூரலிகான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்.
This STR film to have a direct OTT release? - Official word from director here!
10/05/2021 05:43 PM
Sunainaa tests positive for Covid-19 Corona Virus - Official Statement here!
10/05/2021 05:00 PM